Breaking News
Home / சமுதாயம் / அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!
Bahubali

அமரேந்திர பாகுபலி சொல்லும் 5 கார்ப்பரேட் பாடங்கள்!

Thanks : விகடன்

‘பாகுபலி’ படத்தின் 2-வது பாகம் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. `இந்தப் படம் தற்போதைய தமிழக அரசியல் சூழலுக்குச் சரியாகப் பொருந்தும்விதத்தில் உள்ளது’ என நெட்டிசன்களால் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, இந்தப் படம் கார்ப்பரேட் ஆளுமைகளுக்கும் மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது. இந்தப் படத்தின் கதாநாயகனான அமரேந்திர பாகுபலி, நமக்குக்  கற்றுத்தரும் ஐந்து கார்ப்பரேட் பாடங்கள் இதோ….

அப்ரைசலை எதிர்க்காதீர்கள்:

சில நேரங்களில் நீங்கள்தான் பதவி உயர்வுக்குத் தகுதியான நபர் என மொத்த அலுவலகமும் கொண்டாடும். நிர்வாகமும் அதையே நினைக்கும். கடைசி நிமிடத்தில் சில காரணங்களுக்காக, பதவி உயர்வு இன்னொருவருக்கு மாற்றப்படலாம். அதை விமர்சிக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் தகுதியான நபராக இருந்தால் அந்தப் பதவி உங்களைத் தேடி தானாக வரும். அலுவலகமும் அந்தப் பதவியில் யார் ஒருவர் இருந்தாலும் உங்களையே அந்தப் பதவியிலிருந்து செயல்படுவதாக நினைக்கும். திடீரென அரசப் பதவியிலிருந்து விலகி, சேனாதிபதியாக `பாகுபலி’யை அறிவித்தபோதும் அதைச் சரியாக ஏற்றுக்கொண்டதுதான் பாகுபலியைத் தலைவனாகப் பார்க்கவைத்தது.

சுட்டிக்காட்டத் தயங்காதீர்கள்:

ஒரு தவறைச் செய்தது சிஇஓ-வாக இருந்தாலும்கூட அதைச் சுட்டிக்காட்ட தயங்காதீர்கள். உங்கள் முடிவு 100 சதவிகிதம் சரியானது அல்லது தவறு இல்லாதது என்று உங்களுக்குத் தோன்றினால், அதை யாராக இருந்தாலும் தெரிவிக்கத் தயங்காதீர்கள். அது உங்களுக்கு புராஜெக்ட் வழங்கிய க்ளைன்ட் தொடங்கி சிஇஓ வரை யாராக இருந்தாலும் சரி. இதைத்தான் சிவகாமியின் தவறான முடிவுக்கு, பாகுபலியின் நேரடி எதிர்ப்பாக அமையும். கொள்கைகள், வேலைகளுக்கு இருக்க வேண்டும். தனிநபர் சார்ந்து இருக்கக் கூடாது என்பதை உணர்த்துங்கள்.

bahubali

24*7 தலைவனாக இருங்கள்:

ஒரு செயலை அல்லது சரியான பாதையில் திட்டத்தை வழிநடத்த நீங்கள் தலைவனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. உங்களிடம் தலைமைப் பண்பு இருந்தாலே போதும். அதே விஷயத்தை நீங்கள் தலைவனாக இல்லாமலும் நிறைவேற்ற முடியும். பாகுபலியைக் கோட்டையை விட்டு வெளியே அனுப்பியபோதும்  மக்களுக்குத் தேவைப்படும் விஷயங்களைச் சரியாகச் செய்துவந்தார். அதேபோல் அலுவலகத்துக்கு நன்மைபயக்கும் விஷயங்களை உங்களால் செய்ய முடியும் என்றால், அதைத் தலைமைப் பதவிக்கு வந்துதான் செய்ய வேண்டும் என்றில்லை. செய்துகாட்டுங்கள் அது உங்களை அலுவலகத்தில் அமரேந்திர பாகுபலியாக்கும்.

ஸ்கோர் செய்ய நினைக்காதீர்கள்:

அலுவலகத்தில் `எனக்கு இதெல்லாம் தெரியும், இவ்வளவு வேலை செய்கிறேன்’ என்று ஸ்கோர் செய்ய நினைக்காதீர்கள். சில சமயங்களில் நிர்வாகம் அதை விரும்பாது. அதேபோல் மற்றவர்களுக்கு உங்கள் திறனைக் கற்றுக்கொடுங்கள். அதிலும் `எனக்குத் தெரியும்’ என்று ஸ்கோர் செய்ய நினைக்காதீர்கள். பாகுபலி தேவசேனாவின் நாட்டில் எதுவும் தெரியாதவராக இருந்ததும், குமார வர்மனுக்கு தனக்குத் தெரிந்தவற்றைக் கற்றுக்கொடுத்ததும்தான் இதற்கு உதாரணங்கள்.

அணியின் பலத்தை உத்திகளாக்குங்கள்:

உங்கள் அணி ஒருவேளை சிறிய அணியாக இருக்கலாம். அதை வைத்து மிகப்பெரிய இலக்குகளை எட்டுவது கடினம் என்று நிர்வாகமும் நினைக்கலாம். ஆனால், உங்கள் அணியின் பலம் உங்களுக்கு நன்றாகத் தெரியும் அதன் முழுத் திறனையும் (Optimum Output) பயன்படுத்தி இலக்கை நோக்கி நகருங்கள். பாகுபலி தேவசேனா நாட்டில் போர் செய்தபோதும் இதே உத்தியைத்தான் கையாண்டிருப்பார். மேலும், அணியின் வேகம் குறையும்போது தலைவன் முழு வேகத்தில் செயல்பட வேண்டும் என்பதையும் உணர்த்தியிருப்பார்.

About fresawebsite

Check Also

111

ஒரு பில்லியன் டாலர் மதிப்பில் கடற்படை ஆயுதங்கள்: இந்தியாவிற்கு வழங்க அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

வாஷிங்டன்: இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள 13 கடற்படை துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. …