Breaking News
Home / தினம் ஒரு செய்தி / டி.கே.ரங்கராஜன் M.P க்கு பள்ளியில் பாராட்டு விழா

டி.கே.ரங்கராஜன் M.P க்கு பள்ளியில் பாராட்டு விழா

TK-Rangarajan

திருவில்லிபுத்தூர் வட்டம் அயன் நத்தம்பட்டி கிராமத்தில் ஆர்.சி தொடக்கப் பள்ளி , உயர்நிலைப் பள்ளிசெயல்பட்டு வருகிறது. இதில் ஆர்.சி.தொடக்கப் பள்ளியின் சார்பில் வகுப்பறைகள் மற்றும் சுற்றுச் சுவர் கட்டுவதற்கும் நிதி ஒதுக்கக் கோரி மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜனிடம் பள்ளி தாளாளர் மூலம் மனு வழங்கப் பட்டது.

கட்சி மாவட்டக் குழுவும் பரிந்துரை வழங்கியது. இதன் அடிப்படையில் மாநிலங்களவை உறுப்பினர் நிதியில் இருந்து 29 லட்சம் ரூபாயை டி.கே.ரங்கராஜன் ஒதுக்கினார். பள்ளிக்கு நிதி ஒதுக்கிய மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜனுக்கு ஞாயிறன்று காலை பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் அருட்தந்தை திருத்துவராஜ் தலைமை தாங்கினார். தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை எம்.இராணிஅனைவரையும் வரவேற்றார். விழாவில் தொடக்கப் பள்ளி தாளாளர் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜனுக்கு பொன்னாடை போர்த்தினார்.

பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவாக டி.கே.ரங்கராஜன் ஏற்புரைநிகழ்த்தினார். மேலும் 8, 9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி அறிவை வளர்க் கும் பொருட்டு 10 கணினிகள் மாநிலங்களவை உறுப்பினர் நிதியில் இருந்து வழங்குவதாக ஏற்புரையில் அறிவித்தார். விழாவில் கட்சி மாவட்டச் செயலாளர் கே. அர்ச்சுணன், மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் ஏ.குருசாமி, சி.முருகேசன், ஒன்றிய செயலாளர் சி. ஜெயக்குமார், கமிட்டி உறுப்பினர் சி.மணிக்கு மார் மற்றும் உதவிபங்குதந்தை சார்லஸ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இராஜேஸ்வரன், ஆசைத்தம்பி, ஜஸ்டின் திரவியம் உட்பட ஊர் பொது மக்கள், பள்ளி ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜனுக்கு ஊர் எல்லையில் இருந்து மாலை அணிவித்து வரவேற்பு கொடுத்து மேளதாளத்தோடு அழைத்து வந்தனர்.

About yuvaraj

Check Also

111

ஒரு பில்லியன் டாலர் மதிப்பில் கடற்படை ஆயுதங்கள்: இந்தியாவிற்கு வழங்க அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

வாஷிங்டன்: இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள 13 கடற்படை துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. …