Breaking News
Home / இந்தியா / புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே!

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே!

pullANGULALபுல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே

வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே – எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே – எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே – எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் – ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் – அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் – அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)

பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் – அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் – நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் – நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)

 

கவிஞர் கண்ணதாசன் எழுதி, MSV இசையில், TMS பாடியது

About

Check Also

222

தேனியை தொடர்ந்து கோவையிலும் நீட் ஆள்மாறாட்டம்?: 2 மாணவர்களின் புகைப்படங்கள் மாற்றம்…பி.எஸ்.ஜி.கல்லூரி நிர்வாகம் புகார் கடிதம்

கோவை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் வெங்கடேசன் மகன் உதித்சூர்யா (19). இவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து …