Breaking News
Home / உலகம் / ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரஷ்ய அணி வெற்றி
football

ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரஷ்ய அணி வெற்றி

உலக கோப்பை கால்பந்து தொடரில், மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் அணி, போட்டியை நடத்தும் ரஷிய அணியை எதிர்கொண்டது.
football
ஆட்டம் தொடங்கியது முதலே ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் செர்கெய் தனது முதல் கோலை பதிவு செய்தார். பின்னர் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் ரஷ்யா அணி வீரர் அர்டேம் 1 கோல் அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் 1-1 என சமநிலையில் முடிந்தது.

அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தின் இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சியில் தோல்வி அடைந்தது. இதனால் ஆட்டத்திற்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனாலிட்டி ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் ஸ்பெயின் அணி இரண்டு வாய்ப்புகளை வீணடிக்க ரஷ்யா அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 1966-ம் ஆண்டிற்கு பிறகு ரஷ்யா அணி காலிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


About

Check Also

111

ஒரு பில்லியன் டாலர் மதிப்பில் கடற்படை ஆயுதங்கள்: இந்தியாவிற்கு வழங்க அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

வாஷிங்டன்: இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள 13 கடற்படை துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. …