Breaking News
Home / இன்று ஒரு தகவல் / லதா ரஜினிகாந்த் ராஜ் தாக்ரேவுடன் சந்திப்பு
Raj-rajini1

லதா ரஜினிகாந்த் ராஜ் தாக்ரேவுடன் சந்திப்பு

Raj-rajini

மும்பையில் லதா ரஜினிகாந்த் ராஜ் தாக்ரே இல்லத்திற்கு சென்று அவருடன் சந்திப்பு நடத்தியுள்ளார். ராஜ் தாக்ரே மகாராஷ்ட்ரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ஆவார். இவரும் ரஜினிகாந்தும் இதற்கு முன்பே சில முறை சந்தித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தற்போது லதா ரஜினிகாந்த் ராஜ் தாக்ரே இல்லத்திற்கு சென்று அவருடன் சந்திப்பு நடத்தியுள்ளார்.
Raj-rajini1

அரசியல், சமூகப்பணி, சினிமா உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தியதாக லதா ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். விரைவில் ரஜினிகாந்த் ராஜ் தாக்ரேவை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Raj-rajini2அதேபோல் ராஜ் தாக்ரே மனைவி ஷர்மிளாவுடன் லதா ஆலோசனை நடத்தினார். கடந்த சில நாட்களாக அவர் சரியான உடல்நிலையில் இல்லை என்பதால், அவரின் உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்பில் பல விஷயங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிரா குறித்தும், மும்பையை மையமாக வைத்து வெளியான காலா திரைப்படம் குறித்தும் இதில் பேசி உள்ளனர்.

About

Check Also

111

ஒரு பில்லியன் டாலர் மதிப்பில் கடற்படை ஆயுதங்கள்: இந்தியாவிற்கு வழங்க அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

வாஷிங்டன்: இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள 13 கடற்படை துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. …