Breaking News
Home / இன்று ஒரு தகவல் / “பேசாதடா நீ அக்கியூஸ்ட்” என்று டிஎஸ்பி சொன்னார்: ‘பேசுவோமடா நாங்கள் கம்யூனிஸ்ட்’

“பேசாதடா நீ அக்கியூஸ்ட்” என்று டிஎஸ்பி சொன்னார்: ‘பேசுவோமடா நாங்கள் கம்யூனிஸ்ட்’

‘பேசுவோமடா நாங்கள் கம்யூனிஸ்ட்’

மத்திய மாநில ஆட்சியாளர்கள் பின்பற்றக் கூடிய கொள்கைகள் மக்களுக்கு வெளிச்சத்தைக் கொடுக்கவில்லை. மாறாக அவர்களை தற்கொலைக்குத் தூண்டுகிறது. அரசுப் பள்ளிகளை மூடும் திருக்காரியத்தை மாநில அரசு ஆரம்பித்து விட்டது. எங்கெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் போன்ற அமைப்புகள் போர்க்கொடி தூக்குகின்றனவோ, அங்கு மட்டும் அரசுப் பள்ளிகளை மூடுவதை ஒத்தி வைத்துள்ளது மாநில அரசு.சிபிஎம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபுவைசெங்கம் டி.எஸ்.பி சுந்தரமூர்த்தி, தரதரவென இழுத்து வேனில் ஏற்றினார். அப்போது டிஎஸ்பி சொன்னார், “பேசாதடா நீ அக்கியூஸ்ட்” என்று. அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கூறுகிறோம், “பேசுவோமடா நாங்கள் கம்யூனிஸ்ட்”.

இந்த முழக்கத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் உரிமைக்காக போராடி னாலும், கருப்புக் கொடி ஏந்தினாலும் காவல்துறையைக் கொண்டு அடக்குமுறை ஏவுகிறது அரசு. தமிழகத்தில் நடப்பது எடப்பாடியின் ஆட்சியா இல்லை, காவல்துறையின் ராஜ்ஜியமா என்ற கேள்வி எழுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரை, மலைவாழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த டில்லிபாபுவை தரக்குறைவாக பேசி, தாக்கி அழைத்துச் சென்ற டிஎஸ்பி அவர்களே… ‘நீங்கள் தேன் கூட்டில் கை வைத்திருக்கிறீர்கள், தேன் கூட்டில் கை வைத்தால் தேனீக்கள் கொட்டாமல் விடாது’.

About yuvaraj

Check Also

222

தமிழக அரசு அவசர சட்டம்:அமைச்சரவை பரிந்துரையை ஏற்று ஆளுநர் பிறப்பித்தார்

மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கு மறைமுக தேர்தல் * பாஜ போர்க்கொடி: அதிமுக கூட்டணியில் மோதல் வெடித்தது சென்னை: தமிழகத்தில் …