Breaking News
Home / அரசியல் செய்திகள் / சமுதாயமுரண்பாடுகள் – பெரியாரியல்
coal-mine

சமுதாயமுரண்பாடுகள் – பெரியாரியல்

 

சமுதாயமுரண்பாடுகள்பெரியாரியல்

 

முரண்பாடு என்றால் என்ன?

 ஒன்றுக்கு ஒன்று எதிரான இரண்டு பண்புக் கூறுகள் அடங்கிய அமைப்பு நிலைக்கு முரண்பாடு என்று பெயர். இதனைப் பின்வரும் உதாரணம் மூலம் விளக்கலாம்.

எடுத்துக்காட்டாக உயிருள்ள ஒரு பொருளை எடுத்துக் கொள்வோம். ஒரு உயிருள்ள பொருளில் எண்ணற்ற செல்கள் இருக்கின்றன. இந்த செல்களில் சிதைந்து அழுகின்ற நிலையில் சில செல்கள் இருக்கின்றன. தோன்றி வாழ்கின்ற நிலையில் சில செல்கள் இருக்கின்றன. தோன்றி வளரும் செல்களை ஒன்றின் பண்புக் கூறு என்று கொண்டால், சிதைந்து அழியும் செல்கள் அதற்கு எதிர்ப் பண்பைக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு எதிர்எதிர்ப்பண்புக் கூறுகளின் தொகுநிலையே உயிர் இயக்க நிலைக்கு அடிப்படையாக உள்ளது. இது உயிர் என்னும் இயக்க நிலையைப் பொறுத்த முரண்பாடுகள் ஆகும்.

உயிருள்ள ஒரு மரத்தை எடுத்துக் கொள்வோம். இயற்கையோடு இயைந்த மாற்றத்தில் இந்த மரம் மடிந்து பூமியில் புதையுண்டு நிலக்கரியாக  மாறுகின்ற ஒரு நிகழ்ச்சியை எடுத்துக் கொள்வோம்.

மரம் மடிகின்ற நிலையில் அதில் உள்ள உயிர் செல்கள் தோன்றுவதும், அழிவதும் முடிவுக்கு வருகின்றன. அதாவது மேலே சொன்ன ஒன்றுக்கொன்று எதிரான இரு பண்புக் கூறுகளில் தொகு நிலை முடிவுக்கு வருகின்றது. இந்த நிலையில் மடிந்த மரம் நிலக்கரி என்ற தோற்றத்திற்கு வழிவகுக்கிறது. மரம் என்ற பண்புக்கூறு மறைந்து வருவதும், நிலக்கரி என்ற அதற்கு எதிரான பண்புக்கூறு வளர்ந்து வருவதும் ஆன இந்த நிலையில் உள்ள ஒன்றுக்கொன்று எதிரான பண்புக்கூறுகள் ஆகும். இந்த எதிரான பண்புக் கூறுகளின் தொகுவிளைவாக நிலக்கரி உருவாகும் இயக்கம் நடைபெறுகிறது.

இவ்வாறு உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்துப் பொருள்களும் மாற்றமடைந்து வந்து கொண்டிருப்பதும் அந்த மாற்றத்திற்கு அடிப்படையாக ஒன்றுக்கொன்று எதிரான பண்புக்கூறுகள் இருப்பதும் இயற்கை விதியாக இருக்கின்றது.

முரண்பாடுகளின் தொகுநிலை என்பதும் நிலையாக இல்லாமல் மாற்றம் அடைந்து கொண்டே வருகிறது. இந்த மாற்றமும் வளர்ச்சி, அழிவு என்கிற படி நிலைகளில் தான் (stage) நடைபெறுகிறது. இதனை மேலே சொன்ன மரம்நிலக்கரி எடுத்துக்காட்டைக் கொண்டு பின்வரும் படங்கள் மூலம் விளக்குவோம்.

படம் – 1

மரக்கட்டைப்பண்புக்கூறு(wood)         நிலக்கரிப்பண்புக்கூறு

ß—————————————————-|————————————————à

மரம் அழிந்த பின்னர் அது உடனடியாக நிலக்கரியாக மாறிவிடாது. புவியியல் தொடர்பான வேதியல் மாற்றமாக இது நடைபெறுகிறது. இந்த வேதியல் மாற்றத்தில் ஆரம்பத்தில் மரக்கட்டை(wood) என்ற பண்புக்கூறே மேலோங்கி இருக்கும். நிலக்கரி என்ற பண்புக்கூறு தொடக்க நிலையில் தான் இருக்கும். இதனைப் படம் – 1 விளக்குகிறது.

படம் – 2

  மரக்கட்டைப்பண்புக்கூறு        நிலக்கரிப் பண்புக்கூறு

ß——————————————-|———————————————————————à

காலப்போக்கில் மரக்கட்டை பண்புக்கூறு குறைவதும், நிலக்கரி பண்புக்கூறு அதிகரித்து வருவதும் ஒன்றாகவே நடைபெற்று வரும். இது குறைவதை பொறுத்தே அதன் வளர்ச்சி இருக்கும். இதைத்தான் ஒன்றுக்கொன்று எதிரான திசைகள் குறிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் மேலே சொன்ன வேதியல் மாற்றத்தால் மரக்கட்டை பண்புக்கூறு கணிசமாகக் குறைந்து நிலக்கரி பண்புக்கூறு கணிசமாக வளர்ந்து இருப்பதையும்படம் – 2 விளக்குகிறது.

wood 

படம் – 3

     மரக்கட்டைப் பண்புக்கூறு            நிலக்கரிப்பண்புக்கூறு

           ß——————|—————————————————————————————à

coal-mine

காலப்போக்கில் நிலக்கரி பண்புக்கூறு பெரும் அளவு வளர்ந்து இருப்பதையும், மரக்கட்டை  பண்புக்கூறு பெருமளவு குறந்திருப்பதையும் படம் – 3 விளக்குகிறது.

இவ்வாறு முரண்பாடுகளின் தொகுநிலை, இயக்க நிலையில் இருக்கிறது. முரண்பாடுகளின் தொகுநிலையில் ஏற்படும், மாற்றங்கள் அளவு மாற்றங்கள் ஆகும். மாறாக முரண்பாடுகளின் தொகுநிலை முடிவுக்கு வந்து புதிய முரண்பாடுகள் தொகுநிலை தோன்றுகின்ற மாற்றம் பண்பு மாற்றத்தை குறிக்கும். இதனை பின்வரும் எடுத்துக்காட்டால் விளக்கலாம்.

waterdropice water

பனிக்கட்டி

water steam

நீராவி.

பனிக்கட்டிநீர்நீராவி.

            -10°c இல் இருக்கும் ஒரு பனிக்கட்டியை எடுத்துக் கொள்வோம். அதனை வெப்பப்படுத்தும் போது -09°c, -08°c, -07°c, -06°c, -05°c, -04°c, -03°c, -02°c, -01°c, 0°c என்று வெப்பநிலை உயரும். 0°c இல் வெப்பப்படுத்தப்படும்  பனிக்கட்டியானது நீராக உருகத் தொடங்குகிறது. 10°c இல் இருந்து 0°c வரை பனிக்கட்டியில் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம் அளவு மாற்றம் ஆகும். 0°c இல் பனிக்கட்டி (திடபொருள்) நீராக (திரவமாக) உருகும் மாற்றம் பண்பு மாற்றம் ஆகும். இதில் பனிக்கட்டி ஒரு பண்புக்கூறாகவும், நீர் அதன் எதிர் பண்புக்கூறாகவும் உள்ளது. நீரானது வெப்பப்படுத்தப்படும் போது 0°c இருந்து 100°c வரை வெப்பநிலை உயர்கிறது. இந்த மாற்றம் அளவு மாற்றம் ஆகும். 100°c இல் நீர் நீராவியாக மாறுகிறது. இந்த மாற்றம் பண்பு மாற்றம் ஆகும். இதில் நீர் ஒரு பண்புக்கூறாகவும், நீராவி அதன் எதிர் பண்புக்கூறாகவும் உள்ளது. இவ்வாறு எல்லா மாற்றங்களிலும் அளவு மாற்றம், பண்பு மாற்றம் ஏற்படும்.

அண்டங்களில் உள்ள அனைத்து மாற்றங்களும் இந்த அடிப்படையில் தான் நிகழ்கின்றன. இதனை தனி மனிதருக்குப் பொருத்திப் பார்ப்போம்.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி ஒரு தனி மனிதனின் உயிர் இயக்க நிலையில் செல்கள் தோன்றி வளர்கின்ற பண்புக்கூறும், செல்கள் மறைந்து அழியும் அதற்கு எதிரான பண்புக்கூறும் இருப்பதும், இவற்றின் தொகு விளைவாய் உயிர் இயக்க நிலை இருப்பதும் இதுவரை நாம் பார்த்தவற்றால் வெளிப்படும் உண்மை ஆகும்.

தனி மனிதனின் வாழ்வு நிலையைப் பொறுத்தே அவனது உயிர் இயக்க நிலை இருக்கிறது. வாழ்வு நிலையைப் பொறுத்த மட்டில் உணவு, உடை இடம் அடிப்படை உயிரியல் தொடர்பான தேவைகள் ஆகும். உடை, இடம் உள்ளிட்ட மற்ற தேவைகளின் தன்மைகள் அவனது மனநிலை தொடர்பான உயிரியல் தேவைகள் ஆகும். இந்தத் தேவைகள் நிறைவு செய்ய மனிதன் இயற்கையோடு ஒரு செயல் ரீதியான தொடர்பு கொள்கிறான். மிருகங்களும் தமது தேவைகளை நிறைவு செய்ய இயற்கையோடு செயல்ரீதியிலான தொடர்பு கொள்கின்றன. இந்த இரண்டு தொடர்புகளுக்கும் இடையில் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கின்றது. தனது தேவைகளுக்காக மனிதன் இயற்கையின் மீது விழிப்புணர்வோடு(conscious) மாற்றத்தை தூண்டும் வகையில் செயல் ரீதியிலான தொடர்பு கொள்கிறான். மாறாக மிருகங்களோ இயற்கையோடு இணைந்த வகையில் மட்டுமே செய்ல் ரீதியிலான தொடர்பு கொள்கின்றன. எனவே மிருகங்களின் வாழ்வு நிலையைப் பொருத்தமட்டில் இயற்கையோடு இணைந்த முரண்பாடுகளே செயல்ரீதியான தொடர்பு மூலம் அடிப்படையாக இருக்கின்றன.மாறாக மனிதனைப் பொறுத்த மட்டில் அவனது வாழ்வு நிலைக்கு இயற்கையோடு இணைந்த முரண்பாடுகள் மட்டுமின்றி, இயற்கையின் மீது மனிதனால் ( உற்பத்தி விசைகளின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில்) தூண்டப்படும் முரண்பாடுகளும் இருக்கின்றன.

ஒரு தனி மனிதன் தனது வாழ்வு நிலை தேவைகளை நிறைவு செய்ய தனியாக மட்டுமே இயற்கையோடு செயல் ரீதியான தொடர்பு கொள்வதில்லை. மாறாக மனிதர்களின் கூட்டுத் தொகு அமைப்பாக கருதப்படும் சமுதாயம் என்ற அமைப்பின் ஊடே அங்கமாக இருந்து கொண்டே மேற்சொன்ன தொடர்பு கொள்கிறான். மனிதனின் வாழ்வு நிலை தேவைகளை நிறைவு செய்வதற்கான நிகழ்ச்சிப் போக்குகள் பற்றிய முரண்பாடுகள்த் சமூகத்தில் உள்ள முரண்பாடுகளுடன் பின்னி பிணைந்து உள்ளன. மனிதன் சார்ந்துள்ள சமூக அமைப்பின் பண்புக்கூறுகள் பொருள் உற்பத்தி முறையை சார்ந்தே உள்ளன. எனவே சமூகத்தின் முரண்பாடுகள் பொருள் உற்பத்தி முறையை சார்ந்தே உள்ளது. இதன்படி சமூகத்தின் முரண்பாடுகளைச் சரியாகக் கணிக்கச் சமூகத்தின் பொருள் உற்பத்தி முறைகளைச் சரியாகக் கணிக்க வேண்டும்.

(பொருள் உற்பத்தி முறை:-உற்பத்தி விசைகள், உற்பத்தி உறவுகள் ஆகிய இரண்டு அம்சங்களை உள்ளடக்கியதே பொருள் உற்பத்தி ஆகும்.

உற்பத்தி விசைகள்:-உற்பத்தியில் ஈடுபடும் மனிதர்கள், உற்பத்தியில் பயன்படும் கருவிகள் கருவிகளை கையாளும் முறை இவைகளே உற்பத்தி விசைகள் ஆகும்.

உற்பத்தி உறவுகள்:-உற்பத்தியின் பலன்கள் யாருக்குச் சாதகமாகவும் யார்க்குப் பாதகமாகவும் பங்கிடப்படுகின்றது என்பதை நிர்ணயிக்கும் உறவுகள் என்பதே உற்பத்தி உறவுகள் ஆகும்.

உபரி உற்பத்தி அபகரிப்ப:-ஈடு செய்யப்படாத உழைப்பினால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள் உபரி உற்பத்திஅதை ஆதிக்கவாதிகள் அபகரிப்பதே உபரி உற்பத்தி அபகரிப்பு எனப்படும்)

இதனைப் பற்றி மேலும் அறிவதற்குமுன் சமுதாயத்தில் எழும் முரண்பாடுகள் பற்றி காண்போம்.

மனிதர்களின் கூட்டுத் தொகுதி ஒரு சமுதாயம் என்ற அமைப்பு நிலைபெற சில அடிப்படை பண்புக்கூறுகள் தேவைப்படும். இந்தப் பண்புக்கூறுகள் மனிதனின் வாழ்வு நிலை தொடர்புடைய வகையில் சமூகத்தில் மனிதனுக்குள்ள அங்கத்தினரைப் பொறுத்த வகையில் இருக்கும்.அதாவது சில குறிப்பிட்ட நெறிமுறைகளுக்கு, சுய நினைவோடோ , சுய நினைவு இல்லாமலோ ஒரு தனி மனிதன் கட்டுப்பட்டு இருக்க வேண்டிய வகையில் அந்தப் பண்புக் கூறுகள் இருக்கும். இந்த  பண்புக்கூறுகளும் சமுதாயத்தின் பொருள் உற்பத்தி முறையைப் பொறுத்தே இருக்கும். ஐரோப்பிய சமுதாய அமைப்பைப் பொறுத்த மட்டில் வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் புராதான பொதுவுடைமை, பண்ணை அடிமை, நிலவுடைமை, முதலாளித்துவம் என்று பொருள் உற்பத்தி முறை அடிப்படையில் பல்வேறு சமுதாய அமைப்புகள் இருந்து வந்துள்ளதாகச் சமுதாய சிந்தனையுள்ள பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இந்திய சமுதாய அமைப்பைப் பொருத்தமட்டில் வெள்ளைக்காரன் வருவதற்கு முன் நீண்ட நெடுங்காலமாகப் பார்ப்பனிய உற்பத்தி முறையே இருந்து வந்துள்ளது. அதற்கு முன் இருந்த பொருள் உற்பத்தி முறையிலான சமுதாய அமைப்பைப் பற்றி வரலாற்று ஆய்வு முடிவுகள் தெளிவு படுத்தவில்லை.

மேற்சொன்ன ஒவ்வொரு சமுதாய அமைப்பிலும் அந்தந்த சமுதாயத்திற்கான பண்புக்கூறுகள் இருந்தன.

ஒரு சமுதாயத்தின் பண்புக்கூறுகள் சமுதாயத்தின் உபரி உற்பத்தியின் அபகரிப்பையே அடிப்படையாகக் கொண்டு எழுவன ஆகும். வளரும் சமுதாயத்தின் உபரி உற்பத்தி அபகரிப்பு அளவு மாற்றத்தில் வளரும், சமுதாய மாற்றத்தில் உபரி உற்பத்தி அபகரிப்பு பண்பு மாற்றம் பெறும். தனி உரிமை, தனி உடமை சமுதாயத்தில் சுரண்டல், ஒடுக்குமுறை, உற்பத்தி விசைகள் வளர்ச்சி போன்றவற்றிற்கு அடிப்படையாக இருக்கும் உபரி உற்பத்தி அபகரிப்பு பொது உரிமை பொது உடமை சமுதாயத்தில் அபகரிப்பு ஒழிந்து விடாது. சுரண்டலற்ற பொது சமூக நெறிப் பணிகளுக்கு அடிப்படையாக இருக்கும். எனவேஈடு செய்யப்படாத உழைப்புஎன்பது பொது சமூக நெறிப் பொது உரிமை பொது உடமையில் இருப்பதால் பொது சமூக நெறிப் பலன்கள் பொதுவாக இருப்பதால், ‘ ஈடுசெய்யபடாதபண்பு மறைந்து சமூகத்திற்கு ஈடுசெய்வதாக மாறுகிறது. எனவே சமுதாயத்தின் பண்புக்கூறுகள் மற்றும் முரண்பாடுகள் ஆகியவற்றின் ஊற்றுக் கண்களாக உபரி உற்பத்தி அபகரிப்பு உள்ளது.

உதாரணமாக வெள்ளைக்காரன் வருவதற்கு முன் இங்கிருந்த பார்ப்பனிய சமுதாய அமைப்பை எடுத்துக் கொள்வோம். இந்தப் பார்ப்பனிய அமைப்பு இயக்கத் தன்மையில் ஆன தேக்க நிலைக் கொண்டிருந்ததன் மூலம் மற்ற சமுதாய அமைபுகளிடமிருந்து மிகவும் வித்தியாச மானதாகும். எனவே இதன் பண்புக்கூறுகளும், முரண்பாடுகளும் மற்ற சமுதாயத்தின் அமைப்பில் இருந்து வித்தியாசமாக தான் இருக்க முடியும்.

எந்த சமுதாயத்திலும் வாழ்வு நிலைத் தேவைகள் பொருள் உற்பத்தியை அடிப்படையாக கொண்டிருக்கும். எந்த பொருள் உற்பத்தி நடவடிக்கையிலும் உபரி உற்பத்தி அபகரிப்பு முக்கிய பண்புக்கூறாகும். எனவே அதில் பாதிக்கப்பட்டோருக்கும், பலன் பெற்றோர்க்கும் இடையில் முரண்பாடு இருக்கும். இது தவிரப் பொருள் உற்பததியாளர்களுக்கு நடவடிக்கைகளுக்குள்ளேயே, உபரி உற்பத்தி அபகரிப்பு நோக்கில் பாதிக்கப்பட்டப் பொருள் உற்பத்தி நடவடிக்கைகளும், இந்தப் பாதிப்பின் காரணமாகப் பலனைப்  பெறுகின்ற பொருள் உற்பத்தி நடவடிக்கைகளுக்கும் இடையே முரண்பாடு இருக்கும். இந்திய விவசாயம் உபரி உற்பத்தி அபகரிப்பு மற்றும் மூலதன குவிப்பு நோக்கில் ஒரு பாதிக்கப்பட்ட பொருள் உற்பத்தி நடவடிக்கையாக இருக்கிறது. இன்றைய காலத்தில் பார்ப்பனஇந்திய தேசிய பன்னாட்டுக் கூட்டு பொருள் உற்பத்தி நடவடிக்கைகள் பலன் பெறுகின்ற பொருள் உற்பத்தி நடவடிக்கைகளாக இருக்கின்றன. எனவே சமுதாயத்தில் உள்ள முரண்பாடுகள் பொருள் உற்பத்தி நடவடிக்கைகள் மூலம் அதனால் பலன்/பாதிப்பு ஏற்படுகின்ற பண்புக்கூறுகள் வெளிப்படுகின்றன. இன்றைய தினம் கிராமத்தில் விவசாய கூலி உழைப்பாளிக்கும், நில உடைமையாளருக்கும் இடையிலான முரண்பாடுகள், பாதிக்கபட்ட தொழிலில் உள்ளேயே உள்ள முரண்பாடுகள் ஆகும். பன்னாட்டு கூட்டு நிறுவன தொழிலாளியை விட மேலே சொன்ன விவசாயத்தில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் வாழ்வு நிலை மோசமாக இருப்பதில் இருந்து இந்த முரண்பாடுகளின் தன்மை வெளிப்படுகிறது.

இன்றைய தினம் நமது சமுதாயத்தில் உள்ள முரண்பாடுகள்ஆண் பெண் முரண்பாடு பார்ப்பனர்பார்ப்பனரல்லாதார் முரண்பாடு, உயர்ந்த சாதிதாழ்ந்த சாதி முரண்பாடு, இந்துமுஸ்லிம், இந்துசீக்கியர், இந்துகிருத்துவர் முரண்பாடு, இந்தி தேசியமுரண்பாடு, தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடு முதலானவை.

இன்றைக்கு இந்திய சமுதாயத்தில் உள்ள பிரச்சினைகள் அடிப்படையில் மேற்சொன்ன முரண்பாடுகள் கணிக்கப்பட்டுள்ளன. பிரச்சனைகள் இல்லாமல் இருந்தாலும், முரண்பாடுகள் இருக்கும். உதாரணமாக ஆங்கிலேயர் வருகைக்கு முந்தைய சமுதாயத்தில் (பார்ப்பனிய சமுதாயத்தில்) நிலவியப் பார்ப்பனர்பார்ப்பனர் அல்லாதார் முரண்பாடுகள் ஆகும்.

மேலும் தீண்டாமைக் கொடுமை உச்ச நிலையில் இருக்கும் பல கிராமங்களில் விழிப்புணர்வு இல்லாத நிலையில் பிரச்சினைகளே எழுவது இல்லை. ஆனால் அங்கும் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி முரண்பாடுகள் நிலவுகின்றன. எனவே முரண்பாடுகள் பிரச்சனைகளாக வெளிப்படுவதற்குச் சில நெருக்கடிகள் தேவையாக இருக்கின்றன. வாழ்வு நிலை அடிப்படைத் தேவைகள் காரணமாகவும் அல்லது விழிப்புணர்வு காரணமாகவும் இந்த நெருக்கடிகள் தோன்றலாம். பிரச்சனைகள் மூலம் வெளிப்படாத முரண்பாடுகளை உபரி உற்பத்தி அபகரிப்பினை முழுமையாக ஆய்வதன் மூலமே கணிக்கப்படும்.

          (உபரி உற்பத்தி அபகரிப்பு :- ஈடுசெய்யப்படாத உழைப்பினால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள் உபரி உற்பத்திஅதை ஆதிக்கவாதிகள் அபகரிப்பது உபரி உற்பத்தி அபகரிப்பு எனப்படும்.)

உபரி உற்பத்தி அபகரிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பலன் பெறுபவர்களுக்கும் இடையே முரண்பாடுகள் இருக்கும். சம்மந்தப்பட்ட பொருள் உற்பத்தி முறையில் வாழ்வு நிலையைப் (சமூகபொருளாதார – Socio – Economic) வாழ்க்கைத்தரம் (living status) பொறுத்தே பாதிக்கப்பட்டவர்களையும் பலன் பெற்றவர்களையும் அடையாளம் காண முடியும்.

விழிப்புணர்வு அல்லது நெருக்கடி இல்லாத வரை இவை பிரச்சினைகளால் வெளிப்படாத முரண்பாடுகளாகவே இருக்கும்.

எடுத்துக்காட்டாக வெள்ளையர்கள் வருவதற்கு முன் இங்கு நிலவிய பார்ப்பனர்பார்ப்பனர் அல்லாதார் முரண்பாடு உற்பத்தி விசைகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடு சமுதாய மாற்றத்தை தூண்டுவிக்கும் அடிப்படை முரண்பாடு ஆகும். உபரி உற்பத்தி அபகரிப்பு யாருக்குச் சாதகம், யாருக்குப் பாதகம் என்பதை நிர்ணயிப்பது உற்பத்தி உறவுகள் ஆகும். உபரி உற்பத்தி அபகரிப்பில் ஆதிக்கவாதிகளின் மூளை உழைப்பே பெரும்பாலும் உற்பத்தி விசைகளின் வளர்ச்சிக்குத் துணை புரியும். எனவே உபரி உற்பத்தி அபகரிப்பை மையமாக வைத்துக் கணிக்கப்படும் முரண்பாடுகள் அடிப்படை முரண்பாடுகள் ஆகும். அடிப்படை முரண்பாடுகள் ஒன்றாகவோ, பலவாகவோ இருக்கலாம்.

எடுத்துக்காட்டாக, இன்றைய இந்தியாவில் உபரி உற்பத்தி அபகரிப்பில் பார்ப்பனர்கள் மற்றும் இந்திய தேசிய முதலாளிகள், பன்னாட்டு கும்பல்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் உள்ள தேசங்களுக்கும் மேலே குறிப்பிட்ட மூன்று கொள்ளையினருக்கும் இடையே உள்ள முரண்பாடுகள் இங்கு நிலவும் அடிப்படை முரண்பாடுகள் ஆகும்.

எனவே அடிப்படை முரண்பாடுகள் ஒன்றாகவோ, ஒன்றுக்கு மேலாகவோ இருக்கலாம் எனத் தெளிவாகிறது. உபரி உற்பத்தி அபகரிப்பினால் பலன் பெறுபவர்களுக்கு இடையே ஏற்படும் முரண்பாடுகளும், பாதிக்கபட்டவர்களுக்கு இடையில் பாதிக்கப்படும் அளவு வேறுபாடுகளினால் ஏற்படும் முரண்பாடுகளும் அடிப்படை அற்ற முரண்பாடுகள் ஆகும். பலன் பெறுவோருக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு உதாரணம், பார்ப்பனர் (அய்யர், அய்யங்கார்) இந்திய தேசிய முதலாளிபன்னாட்டு ஏகபோக முதலாளிகள் ஆகியோருக்கு இடையிலான முரண்பாடுகள். பாதிக்கப்பட்டோருக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு எடுத்துக்காட்டு தாழ்த்தப்பட்டோர்க்கும்பிற்படுத்தப்பட்டோர்க்கும் இடையிலான முரண்பாடுகள் (வன்னியர்பள்ளர்).

நட்பு / பகை முரண்பாடுகள்:முரண்பாடுகள் சமாதானமாகத் தீர்த்துக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு. மோதித் தீர்த்துக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு. நட்பு முறையில் தீர்த்துக் கொள்ளும் முரண்பாடுகள் நட்பு முரண்பாடுகள் என்றும் மோதித் தீர்த்துக் கொள்ளும் முரண்பாடுகள் பகை முரண்பாடுகள் என்றும் கூறலாம்.

முக்கிய முரண்பாடு: குறிப்பிட்ட காலகட்டத்தில் மற்ற முரண்பாடுகளோடு தொடர்புடைய பிரச்சினைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு மேலோங்கி நிற்கின்ற பிரச்சினையோடு தொடர்புடைய முரண்பாடுகள் முக்கிய முரண்பாடுகள் ஆகும். முக்கிய முரண்பாடுகள் அடிப்படை முரண்பாடுகளாகவும் இருக்கலாம்.

பார்ப்பனர்பார்ப்பனர் அல்லாதார்க்கு இடையிலான பிரச்சனை பின்னுக்குத் தள்ளி விட்டு தாழ்த்தப்பட்டபிற்படுத்தப்பட்டோருக்கிடையிலான பிரச்சனையை முன்னே கொண்டு வருவது அடிப்படையற்ற முரண்பாடு, முக்கிய முரண்பாடாவதற்கு உதாரணம் ஆகும்.

பார்ப்பனர் இந்திய தேசிய முதலாளிகள் பன்னாட்டு ஏகபோக முதலாளிகள் ஆகியோருக்கும், தேசங்களுக்கும் இடையிலான முரண்பாட்டை முதன்மையாகக் கொள்வது அடிப்படை முரண்பாட்டை முக்கிய முரண்பாடாகக் கொள்வதற்கு உதாரணமாகும்.

அடிப்படை முரண்பாடுகளை / முரண்பாட்டை தீர்க்காமல் பிரச்சனையை நிரந்தரமாகத் தீர்க்க முடியாது. அதாவது பண்பு மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

அடிப்படை அற்ற முரண்பாடுகள் முக்கிய முரண்பாடுகளாக இருப்பதும், நட்பு முரண்பாடு பகை முரண்பாடாவதும், பகை முரண்பாடு நட்பு முரண்பாடாவதும், அடிப்படை முரண்பாட்டை முரண்பாடுகளை தீர்ப்பதை தாமதப்படுத்தும்.

எடுத்துக்காட்டுகள்:விவசாயிகள் பிரச்சனையில், நிலவுடைமையாளர்களுக்கும், கூலி உழைப்பாளர்க்கும் இடையிலான முரண்பாட்டை முக்கிய முரண்பாடாக காட்டுவதோ நட்பு முரண்பாடான இந்த முரண்பாட்டினை பகை முரண்பாடாக காட்டுவதோ இதற்கு உதாரணம் ஆகும்.

பார்ப்பனர்பார்ப்பனர் அல்லாதார் முரண்பாட்டை மறைத்து இந்து என்ற பெயரில் பார்ப்பனரையும், பார்ப்பனர் அல்லாதவரையும் சேர்த்துப் பார்ப்பது பகை முரண்பாடு நட்பு முரண்பாடு ஆவதற்கு உதாரணம் ஆகும்.

அடிப்படை முரண்பாடுகளை தீர்ப்பதைக் தாமதப்படுத்தும் மேற்கண்ட போக்குகளை (அடிப்படையற்ற முரண்பாடு முக்கிய முரண்பாடாக கணிப்பது, பகை முரண்பாட்டை நட்பு முரண்பாடாக பார்ப்பது, நட்பு முரண்பாட்டை பகை முரண்பாடாக பார்ப்பது) தகர்க்கும் வகையில் தான் நம்முடைய செயல்பாடு இருக்க வேண்டும்.

முரண்பாடு வகைகள்:  அடிப்படை முரண்பாடு அடிப்படையற்ற முரண்பாடு, முதன்மை முரண்பாடு, முக்கிய முரண்பாடு, நட்பு முரண்பாடு பகை முரண்பாடு ஆகியவையாகும்.

 

 

முதன்மை முரண்பாடு:

அடிப்படை முரண்பாடுகளில் எந்த அடிப்படை முரண்பாட்டை முதலில் தீர்த்தால் மற்ற அடிப்படை முரண்பாடுகளை தீர்க்க முடியுமோ அந்த அடிப்படை முரண்பாடே முதன்மை முரண்பாடு ஆகும்.

நமது சமுதாயத்தில் உள்ள அடிப்படை முரண்பாடுகளில் பார்ப்பனர்பார்ப்பனர் அல்லாதார் முரண்பாடு, இந்திய தேசியதேசிய முரண்பாடு இவை இரண்டும் ஒன்றோடோன்று பின்னிப் பிணைந்துள்ளது அடிப்படை முரண்பாடுகள் ஆகும்.

இந்திய தேசியம் என்பது பார்ப்பன கண்டுபிடிப்பே இந்த பின்னணிக்கான அடிப்படைக் காரணமாகும்.

இனி நமது சமுதாயத்தில் உள்ள முரண்பாடுகளை பட்டியலிட்டு பார்க்கலாம்.

1.    பார்ப்பனர்பார்ப்பனர் அல்லாதார் முரண்பாடு இது அடிப்படை முரண்பாடாகும் (அடிப்படை முரண்பாடு என்பது உபரி உற்பத்தி அபகரிப்பை மையமாக வைத்து கணிக்கப்படும் முரண்பாடு ஆகும்).

2.    இந்திய தேசியதேசிய முரண்பாடு இது அடிப்படை முரண்பாடும்.

3.    ஆண்பெண் முரண்பாடு இது அடிப்படை முரண்பாடும்.

4.    பார்ப்பனர் அல்லாதாருக்குள் உயர்ந்த சாதிதாழ்ந்த சாதி முரண்பாடு அடிப்படையற்ற நட்பு முரண்பாடு ஆகும்.

                 ( அடிப்படையற்ற முரண்பாடு என்பது உபரி உற்பத்தி அபகரிப்பினால் பலன் பெறுபவர்களுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகளும் பாதிக்கபட்டவர்களுக்கு இடையில் பாதிக்கப்படும் அளவு வேறுபாடுகளினால் ஏற்படும் முரண்பாடுகளும் ஆகும்.

நட்பு/பகை முரண்பாடுகள்:-முரண்பாடுகள் சமாதானமாகத் தீர்த்துக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு, மோதி தீர்த்துக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு. நட்பு முறையில் தீர்த்துக் கொள்ளும் முரண்பாடுகளை நட்பு முரண்பாடுகள் என்றும், மோதித் தீர்த்துக் கொள்ளும் முரண்பாடுகளை பகை முரண்பாடுகள் என்றும் கூறலாம்.

5.    பார்பனருக்குள் உயர்ந்த சாதிதாழ்ந்த சாதி முரண்பாடு அடிப்படையற்ற நட்பு முரண்பாடு ஆகும்.( சாஸ்திரி, ஷர்மா,அய்யர்,அய்யங்கார்…)

6.    இந்திய துணைக் கண்டத்தில் தேசிய இனங்களுக்கு இடையிலான முரண்பாடுஅடிப்படையற்ற நட்பு முரண்பாடு ஆகும்.

7.    ஒரே சாதிக்குள் ஏழைபணக்காரன் முரண்பாடு , சாதி , தேசிய சிக்கல் இருக்கும் வரை அடிப்படையற்ற நட்பு முரண்பாடு ஆகும்.

8.    இந்துமுஸ்லிம் முரண்பாடு.

பகை——–>நட்பு,நட்பு ——->பகை முரண்பாடு ஆகும்.

       (பகை முரண்பாடாக இருக்க வேண்டிய பார்ப்பனர்பார்ப்பனர் அல்லாதார் இந்து என்ற அணியில் நட்பு முரண்பாடாக வருகின்றனர். பார்ப்பனர் அல்லாதார்முஸ்லிம் நட்பு முரண்பாடாக இருக்க வேண்டியது. இந்துமுஸ்லிம் மோதல் மூலம் பகை முரண்பாடாக உள்ளது

9.    இந்துகிருத்துவர் முரண்பாடு

பகை——–>நட்பு,நட்பு ——->பகை முரண்பாடு ஆகும்.

இந்துசீக்கியர் முரண்பாடு

பகை——–>நட்பு,நட்பு ——->பகை முரண்பாடு ஆகும்

 

முரண்பாட்டை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

முரண்பாடுகளைப் பற்றிய தெளிவான அறிவு எந்த சூழ்நிலையிலும் எந்த பிரச்சனையிலும் ஒன்றுக்கொன்று எதிராக இரண்டுசக்திகள் செயல்படும் போது அந்த கட்டத்தில் எது முற்போக்கானது, எது பிற்போக்கானது என்று தெளிவாக முடிவு எடுக்க ஏதுவாகும். இதனால் தவறான நிலைப்பாடுகள் பெரும் கஷ்டத்தை அனுபவிப்பது தவிர்க்கப்படும்.

அடிப்படை முரண்பாடுகளை கணித்து அதன் அடிப்படையில் அடிப்படை எதிரிகளை நிர்ணயித்தால் தான் அதன் பின் மற்ற முரண்பாடுகளை கையாளுவது எளிதாக இருக்கும்..

இதற்கு வரலாற்றில் சரியான முன்னுதாரணமாக தோழர். பெரியார். .வெ.ரா. இருக்கிறார் மேலோட்டமாக பார்க்கையில் அவரின் நிலைப்பாடுகளும், கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரணனானதாகத் தோன்றலாம்.ஆனால், முரண்பாடுகளைப்பற்றிய தெளிவான அறிவு தோழர் பெரியார் ஈ.வே.ரா வின் நிலைப்பாடுகளும், கருத்துகளும் முரண்பாடுகளைக் கையாளுவதற்கு நடைமுறை முன்னுதாரணமாக இருப்பதைத் தெளிவு படுத்தும்.

மனித குல வரலாறு சந்தித்த மனித விரோதக் கொள்கைகளில் இணை சொல்ல முடியாத கொடுமையாக பார்ப்பனியத்தை அதனை உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனர்களை எதிர்த்த தந்தை பெரியார் அதனையே முதலில் தீர்க்க வேண்டிய அடிப்படை முரண்பாடாக கணித்து அந்த அடிப்படையிலே நிலைப்பாடுகள் மேற்கொண்டார். தந்தை பெரியாரின் நிலைப்பாடுகளும், கருத்துக்களும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாக எண்ணி குழம்புபவர்களுக்கு அவரே பின்வருமாறு தெளிவு படுத்துகிறார்.

முரண்பாட்டை பற்றி தந்தை பெரியார்:

      “நான் அடிக்கடி கொள்கையில் மாற்றம் அடையவன் என்று சொல்லப்படுகிறது. உண்மையாக இருக்கலாம். நீங்கள் அதை ஏன் கவனிக்கிறீகள்? ஒரு மனிதன் அவன் பிறந்தது முதல் இன்று வரை திருடிக் கொண்டே இருக்கின்ற ஒரே நிலைக்காரன் என்று சொல்லப்பட்டால் , அவன் மகா யோக்கியனா? எந்த மனிதனும் ஒரே நிலையில் இருக்க வேண்டும் என்று நீங்கள் ஏன் ஆசைப்படுகிறீர்கள்? அதனால் உங்களுக்கு என்ன இலாபம்? மாறுதல் முற்போக்கு உள்ளதா? பிற்போக்கு உள்ளதா? அதனால் மக்களுக்கு நன்மையா? தீமையா? என்பன போன்றவைகளைக் கவனிக்க வேண்டியது தான் அறிவாளிகளின் கடமையாகும்.

மற்றும் பொது நன்மையை உத்தேசித்து கஷ்டப்படுகிற மக்கள் நன்மையை  உத்தேசித்து மாறினானா? அல்லது சுயநலத்திற்குஅக்கிரமமான இலாபமாடைவதற்கு மாறினானா? என்று பார்க்க வேண்டும். யோக்கியன், அறிவாளி, ஆராய்ச்சியாளி, பொறுப்பாளி, கவலையாளி ஆகியவர் மாற வேண்டியது அவசியம் ஆகலாம். அதைப்பற்றிய கவலை ஏன்? பார்க்கின்றவர்களுக்குப் புத்தியும், கண்ணும் சரியாய் இருந்தால், மாற்றத்தைப்பற்றி ஒன்றும் ஆபத்து வந்து விடாது.

கோயில் கட்டிய மக்கள், கோயிலை இடிக்க வேண்டியவர்களாகி விடுவார்கள் அகிம்சை பேசுபவர்கள் பலாத்காரத்தைப் பேச வேண்டியவர்களாகி விடுவார்கள் இராஜ விசுவாசிகள் இராஜ துரோகிகள் ஆகி விடுவார்கள். திருடக்கூடாது என்பவர்கள் கொள்ளையடிக்க சொல்வார்கள். இப்படியாக அபிப்பிராயங்கள் மாறிக் கொண்டு போகலாம். இவற்றையெல்லாம், அபிப்பிராயங்கள் மாறியதாலேயே குற்றம் என்று சொல்லிவிட முடியாது. தங்களை நல்ல சூத்திரர்கள் என்று சொல்லிக் கொண்டு பார்ப்பனர்கள் கால்களைக் கழுவிய தண்ணீருக்குப் பவுன் கொடுத்து சாப்பிட்டவர்கள் இன்று.

   ‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்றும் பார்ப்பனர்கள் ஜாக்கிரதைஎன்று ஏன்  சொல்லுகிறார்கள்? இந்த மாற்றத்தில் இப்படி சொன்னவர்கள் அயோக்கியர்கள் ஆக முடியுமா? தவிரசூத்திரன் பணம் வைத்திருந்தால் பிராமணர்கள் பலாத்காரத்தால் அதைப் பறித்துக் கொள்ளலாம் என்று மனுதர்ம சாஸ்திரத்தில் இருந்தது மாறி இப்பொழுது வெள்ளையர் தர்மத்தில் தந்திரங்களினாலும் சூழ்ச்சியினாலும் மாத்திரந்தான் பறித்துக் கொள்ளலாம் என்கின்றதான் மாறுதல் ஏற்பட்டு விட்டது. நாளை ஒரு சமயம் சமதர்ம காலத்தில் பிராமணர்கள்(சரீரத்தால் பாடு படாதவன்)  சொத்து வைத்திருந்தால் மற்றவர்கள் பலாத்காரத்தில் பிடுங்கிக் கொள்ளலாம் என்று ஏற்பட்டாலும் ஏற்படலாம். இந்த மாதிரி மாறுதல்கள் காலத்திற்கும், பகுத்தறிவிற்கும் நாட்டின் முற்போக்கிற்கும் ஏற்றார் போல் நடந்து தான் தீரும். எனவே நான் மாறுதலடைந்து விட்டேன் என்று சொல்லப்படுவதில் வெட்கப்படுவதில்லைபெரியார். ..வெ.ராகுடியரசு 11.10.1931.

நேற்றைய முற்போக்கு இன்றைய பிற்போக்காக இருக்கலாம். இன்றைய முற்போக்கு நாளை பிற்போக்காக மாறலாம். பண்பாடுகளை சரியாக கணித்து நிலைபாடு எடுக்கத் தெரியாதவர்கள் தாம் முற்போக்காக இருக்க விரும்பினாலும் பிற்போக்கு நிலைப்பாடுகளை எடுக்க தவறுகள் புரிவதைத் தடுக்க முடியாது.

About

Check Also

222

தமிழக அரசு அவசர சட்டம்:அமைச்சரவை பரிந்துரையை ஏற்று ஆளுநர் பிறப்பித்தார்

மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கு மறைமுக தேர்தல் * பாஜ போர்க்கொடி: அதிமுக கூட்டணியில் மோதல் வெடித்தது சென்னை: தமிழகத்தில் …