Breaking News
Home / பா.ம.க. (PMK) செய்திகள் / பா.ம.க. தயாரித்த நிழல் பட்ஜெட்… டாக்டர். ராமதாஸ் இன்று வெளியிட்டார்
Ramadoss122

பா.ம.க. தயாரித்த நிழல் பட்ஜெட்… டாக்டர். ராமதாஸ் இன்று வெளியிட்டார்

சென்னை: பாமக தயாரித்த 2019-2020-ம் ஆண்டுக்கான, 17-வது பொது நிழல் பட்ஜெட்டை டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். பா.ம.க. கடந்த 2003-2004-ம் ஆண்டு முதல் பொது நிழல் பட்ஜெட் அறிக்கைகளை மக்கள் மன்றத்தில் வெளியிட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 16 நிழல் பட்ஜெட் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது.
PMK Prepared Shadow Budget Dr. Ramadoss Released By Today
இந்தநிலையில், 2019-2020-ம் ஆண்டுக்கான, 17-வது பொது நிழல் பட்ஜெட் இன்று சென்னை தியாகராயநகர் பர்கிட் சாலையில் உள்ள பா.ம.க. அலுவலகத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பொது நிழல் பட்ஜெட் அறிக்கையை வெளியிட்டார். வழக்கம் போலவே தமிழ்நாட்டின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு பெருக்கம், வேளாண்மை, கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு பெருக்கம், வறுமை ஒழிப்பு, பெண் குழந்தை பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் என 102 தலைப்புகளில் 401 ஆலோசனைகள் நிழல் பட்ஜெட் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

 

அறிக்கையை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ், தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுவது வேதனை அளிப்பதாக கூறினார். மேலும், துப்பரவு பணிக்கு கூட ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிப்பதாக தெரிவித்தார்.

About yuvaraj

Check Also

111

தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை வேண்டும்: ராமதாஸ்

காட்டுமன்னார்கோவில் அருகே விவசாயி தற்கொலைக்கு காரணமான தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் …