Breaking News
Home / பா.ம.க. (PMK) செய்திகள் / தமிழகத்தில் அரசியல் சூழல் மாறியதால் அதிமுகவுடன் கூட்டணி: அன்புமணி விளக்கம்
222

தமிழகத்தில் அரசியல் சூழல் மாறியதால் அதிமுகவுடன் கூட்டணி: அன்புமணி விளக்கம்

சென்னை: தமிழகத்தில் அரசியல் சூழல் மாறியதால் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக-பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது. இதற்காக பாமகவுக்கு அதிமுக 7 மக்களவை சீட்டும், 1 மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்த பாமக திடீரென கூட்டணி வைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கூட்டணி தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவுடன் கூட்டணி அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி சேர மாட்டோம் என சொன்னது உண்மை, மறுக்கவில்லை. ஆனால் 2011-ல் சொன்னபோது இருந்த சூழல், தற்போது இல்லை ஆதலால் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்.  நிர்வாகிகளை கேட்டறிந்த பின் கூட்டு முடிவின்படி அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். 10 அம்ச கோரிக்கைகளை முதல்வரிடம் வழங்கி உள்ளோம், நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளோம். விவசாய கடன் ரத்து, காவிரி படுகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட திட்டங்கள் வரக்கூடாது என்ற கோரிக்கையை பரிசீலப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கும் அரசு நடவடிக்கை எடுக்கும்; நாங்கள் அழுத்தம் கொடுப்போம். விமர்சனம் செய்தால் கூட்டணி வைக்கக் கூடாதா?. இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டோம் என முடிவெடுத்துள்ளோம். இந்த கூட்டணியால் பாமகவின் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம். பாமக அளித்த ஊழல் புகார் குறித்து ஆளுநர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்

அதிமுக உடன் கூட்டணி வைக்குமாறு ராமதாசிடம், பாமக தொண்டர்கள் வலியுறுத்தினார்கள்.  நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி முடிவெடுக்க பாமக நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம் வழங்கி பொதுக்குழு முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். அதிமுக ஊழல் கட்சி என்ற உங்கள் முந்தைய கருத்து அப்படியே உள்ளதா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அன்புமணி, சிபிஐ விசாரணை முடிந்த பின்னரே அது உண்மையா இல்லையா என்பது தெரியவரும் என கூறினார்.

About yuvaraj

Check Also

111

தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை வேண்டும்: ராமதாஸ்

காட்டுமன்னார்கோவில் அருகே விவசாயி தற்கொலைக்கு காரணமான தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் …