Breaking News
Home / உலகம் / அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும்: டிரம்ப் டுவிட்டரில் கோரிக்கை
222

அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும்: டிரம்ப் டுவிட்டரில் கோரிக்கை

வாஷிங்டன்: 14-வது ‘ஜி-20’ உச்சி மாநாடு ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் 28-29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதற்காக தனிவிமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி, இன்று ஜப்பான் சென்றடைந்தார். பிரதமர் மோடி பங்கேற்கும் 6-வது ஜி -20 மாநாடு இதுவாகும்.

ஒசாகா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜி 20 மாநாட்டின் போது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜப்பான் பிரதமர், சீன அதிபர், உள்ளிட்ட முக்கிய தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். இந்நிலையில் அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று டொனால்டு டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். முன்னதாக இந்தியாவுக்கு அளித்த வரிச் சலுகைகளுக்கான சிறப்பு அந்தஸ்தை அமெரிக்கா ரத்து செய்தது. இந்த நிலையில் அமெரிக்காவின் 28 பொருட்களுக்கான சுங்க வரியை இந்தியா அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்க பொருட்களுக்கு அதிகரித்த சுங்க வரியை திரும்ப பெற பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

டிரம்ப்  டுவிட் பதிவு;
“ பிரதமர் மோடியை சந்திப்பதை எதிர் நோக்கியுள்ளேன். கடந்த சில ஆண்டுகளில்  அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா அதிக வரிகளை விதித்துள்ளது. அண்மையில் மீண்டும் அதிக வரி விதிக்கப்பட்டது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது.  அதிக வரி விதிப்பை கண்டிப்பாக திரும்பப் பெற வேண்டும்” என கூறியுள்ளார்.

About yuvaraj

Check Also

bail-storm2

வாயு புயல் குஜராத்தை தாக்காது: இந்திய வானிலை மையம் தகவல்

குஜராத்: அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள வாயு புயல் போர்பந்தர் – துவாரகா இடையே கடற்கரையை ஒட்டி கரையை கடக்கிறது. வாயு …