Breaking News
Home / அ.தி.மு.க.(ADMK) / 14 நாள் சுற்றுப்பயணமாக வெளிநாடு சென்றார் முதல்வர் பழனிசாமி: லண்டனில் தமிழர்கள் உற்சாக வரவேற்பு
222

14 நாள் சுற்றுப்பயணமாக வெளிநாடு சென்றார் முதல்வர் பழனிசாமி: லண்டனில் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

லண்டன்: லண்டன் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 9.50 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் லண்டன்  புறப்பட்டு சென்றார். அவருடன் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வரின் செயலாளர்கள் விஜயகுமார், சாய்குமார், செந்தில்குமார், நேர்முக உதவியாளர்கள் ஸ்ரீதர், கிருஷ்ணன், சிறப்பு பணி அதிகாரி எழிலழகன்,  போட்டோகிராபர் பாபு, 3 பாதுகாப்பு அதிகாரிகள் உடன் சென்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வெளிநாடு பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர்  10ம் தேதி சென்னை திரும்புகிறார்.

இதற்கிடையே, நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்ற முதல்வர் எடப்பாடி, நேற்று மாலை 6.40 மணிக்கு லண்டன் சென்றடைந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்திலும், தங்கியுள்ள  ஓட்டலிலும் வரவேற்க திரளான தமிழர்கள் வந்திருந்தனர். முதல்வர் பழனிசாமிக்கு பொன்னாடை போர்த்தியும், மாலை அணிவித்தும் அவர்கள்  வரவேற்றனர்.

லண்டனில் வருகிற 1ம் தேதி வரை தங்கி இருந்து, அங்குள்ள சில மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பணித்திறன் மேம்பாடுகள் குறித்து நேரில் பார்வையிடுகிறார். லண்டன் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையுடன்  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். தமிழக அரசு விரைவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ள ஏர் ஆம்புலன்ஸ் விமானம் வாங்குவது குறித்தும் அங்குள்ள நிறுவனத்திடம் பேச்சுவர்த்தை நடத்துகிறார். இந்துஜா உள்ளிட்ட பெரிய  தொழில் நிறுவன அதிபர்களையும் சந்தித்து பேச முதல்வர் திட்டமிட்டுள்ளனர்.

About yuvaraj

Check Also

222

தமிழகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம்: கண்டலேறு அணையிலிருந்து நீர் பெற ஆந்திர முதல்வரை சந்திப்பாரா முதல்வர் பழனிசாமி?

சென்னை: கண்டலேறு அணையில் இருந்து முதல் தவணை காலத்தில் தர வேண்டிய 8 டிஎம்சி நீர் பெற ஆந்திர முதல்வரை …