Breaking News
Home / உலகம் / மத்தியஸ்தம் தேவையில்லை என்பது இந்தியாவின் நிலைப்பாடு: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்துக்கு வெளியுறவு அமைச்சகம் பதில்
2222

மத்தியஸ்தம் தேவையில்லை என்பது இந்தியாவின் நிலைப்பாடு: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்துக்கு வெளியுறவு அமைச்சகம் பதில்

டெல்லி: காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் தேவையில்லை என்பது இந்தியாவின் நிலைப்பாடு என்பது அனைவருக்கும் தெரியும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த 10-ம் தேதி வெள்ளை மாளிகையில்  செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மோதல் இருப்பதாக குறிப்பிட்டார். ஆனால், இரண்டு வாரங்களுக்கு முன்னர் இருந்த நிலையோடு ஒப்பிடும்போது மோதலில் சற்று  அனல் தணிந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்ற நிலை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இவ்வாறு பதிலளித்த டிரம்ப், இரு நாடுகளுடன் நல்ல உறவை பேணி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் இருநாடுகளும் விரும்பினால் தாம் உதவ தயார் என்றும், தான் இவ்வாறு உதவ தயாராக இருப்பது இரு நாடுகளுக்குமே தெரியும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். தாம் உதவ தயார் என ஏற்கனவே முன்வந்ததில் எவ்வித  மாற்றமும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார். காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிடக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. இந்தச் சூழலில், ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்தார். அப்போது காஷ்மீர் விவகாரம் பெரிய பிரச்னையாக  உருவெடுத்திருப்பதால், வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு இதில் தலையிட வேண்டிய பொறுப்பு இருப்பதாக தெரிவித்தார்.

இதற்குப் பதில் அளித்த ட்ரம்ப், காஷ்மீர் பிரச்னை இருநாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நடந்து வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் தாம் நிச்சயம் உதவ தயாராக இருப்பதாகவும், அதே சமயம், இந்தியாவும் இதற்கு ஒப்புதல் அளித்தால்  மட்டுமே மத்தியஸ்தம் செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய பிரதமர் மோடியுடனும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனும் தமக்கு நல்ல நட்புறவு இருப்பதாகவும், காஷ்மீர்  விவகாரத்தில் தம்மால் நிச்சயம் நல்ல மத்தியஸ்தராக இருக்க முடியும் என்றும் கூறினார்.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்கத்தின் மேற்கு பிராந்திய செயலர் கிதேஷ் சராமா கூறுகையில், மத்தியஸ்தம் தொடர்பாக கேள்வியை எழுப்பும் டிரம்ப், பின்னர் அதில் இருந்து பின்வாங்கி செல்கிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப் – பிரதமர்  மோடி இடையிலான சந்திப்பு நிகழ உள்ளது. அதுவரை அனைவரும் பொறுத்திருங்கள் என்று கூறினார்.

வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறுகையில், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் தேவையில்லை என்பது இந்தியாவின் நிலைப்பாடு. இது அனைவருக்கும் தெரியும். இதனையே கடந்த காலங்களிலும்  கூறியுள்ளோம். சற்று பொறுத்திருங்கள் என்பது எனது வேண்டுகோள் என கூறினார்.

About yuvaraj

Check Also

bail-storm2

வாயு புயல் குஜராத்தை தாக்காது: இந்திய வானிலை மையம் தகவல்

குஜராத்: அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள வாயு புயல் போர்பந்தர் – துவாரகா இடையே கடற்கரையை ஒட்டி கரையை கடக்கிறது. வாயு …