Breaking News
Home / தமிழகம்

தமிழகம்

தமிழக அரசு அவசர சட்டம்:அமைச்சரவை பரிந்துரையை ஏற்று ஆளுநர் பிறப்பித்தார்

222

மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கு மறைமுக தேர்தல் * பாஜ போர்க்கொடி: அதிமுக கூட்டணியில் மோதல் வெடித்தது சென்னை: தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகியோரை கவுன்சிலர்களே தேர்வு செய்வதற்கான புதிய அவசர சட்டத்தை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்  நேற்று பிறப்பித்தார். இந்த நடவடிக்கைக்கு கூட்டணிக் கட்சியான பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் கண்டனம் …

Read More »

வெங்காய விலை உயர்வு: ஆப்கான், எகிப்து, ஈரான் மற்றும் துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம்…!

2222

டெல்லி: ஆப்கான், எகிப்து, ஈரான் மற்றும் துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கான் வெங்காய சந்தையில் இருந்துதான் நாடு முழுவதுக்குமான வெங்காயம் அனுப்பப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்திலும் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. இம்மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்ததன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் வெங்காய பயிர்கள் …

Read More »

சீன அதிபர் வருகையின் போது கிண்டி, வேளச்சேரி வழிதடத்தில் ரயில்கள் நிறுத்தப்படும் : தெற்கு ரயில்வே

222

சென்னை: வேளச்சேரி – கடற்கரை செல்லும் பறக்கும் ரயில்களும் தேவைப்பட்டால் சிறிது நேரம் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சீன அதிபர் இன்று சென்னை வரும்போது, தேவைப்பட்டால் கிண்டி வழித்தடத்தில் சிறிதுநேரம் ரயில்கள் நிறுத்தப்படும் என்றும், புறநகர், விரைவு ரயில்களை பல்லாவரம் பகுதியில் சிறிது நேரம் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜின்பிங் இன்று மதியம் …

Read More »

தேனியை தொடர்ந்து கோவையிலும் நீட் ஆள்மாறாட்டம்?: 2 மாணவர்களின் புகைப்படங்கள் மாற்றம்…பி.எஸ்.ஜி.கல்லூரி நிர்வாகம் புகார் கடிதம்

222

கோவை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் வெங்கடேசன் மகன் உதித்சூர்யா (19). இவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டில் சேர்ந்தார். இந்நிலையில் கடந்த 11ம்  தேதி இதுபற்றி மெயிலில் புகார் வந்தது. இதன் பின்பே தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு தெரிய வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் ஒரு குழுவை அமைத்தார். அக்குழுவினர் நடத்திய  விசாரணையில் உதித்சூர்யா …

Read More »

கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு; தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு; மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

111

சேலம்: கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்திருப்பதால் தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு 11,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக, கேரள மாநிலங்களில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ்., கபினி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையில் 6,039 கன அடியும், கபினி அணையில் இருந்து 5,000 கன …

Read More »

கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

222

மேட்டூர்: கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. தற்போது மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 4,000 கனஅடி காவிரி நீர் வந்துகொண்டிருக்கிறது. கர்நாடகாவின் குடகு உள்ளிட்ட மாவட்டங்களில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேலும்  கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கர்நாடக அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஜூலை 17 ம் தேதி கே.ஆர்.எஸ் அணையில் …

Read More »

பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவு செல்லும் பால் பாக்கெட்டுக்கு தடை

222

இனி பாட்டிலில்தான் விற்க வேண்டும் * உயர் நீதிமன்றம் அதிரடி ஆணை சென்னை:  பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1ம் தேதி முதல் தடை விதித்து தமிழக அரசு  பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்குப் பதிலாக அவற்றை பாட்டில்கள் மூலமாக விற்பனை செய்வது போன்ற மாற்று ஏற்பாடுகளை செய்ய அரசுக்கு உத்தரவிடுகிறோம் என்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மறு …

Read More »

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வைகோ உட்பட 7 பேர் மனு ஏற்பு: 4 மனுக்கள் நிராகரிப்பு

vaikod-600-

சென்னை: மாநிலங்களவை எம்பி தேர்தலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனு ஏற்கப்பட்டுள்ளது. அதேபோல, திமுக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் 6 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன. நாளை வேட்பு மனு வாபஸ்பெற கடைசி நாள் என்ற நிலையில், 18ம் தேதி தேர்தல் நடைபெறுமா என்பது நாளை மறுநாள் தெரியவரும். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 எம்பிக்கள் தேர்வு ெசய்யப்பட வேண்டும். ஒரு எம்பியை தேர்வு செய்ய …

Read More »

நாட்டிலேயே வறட்சியான நகர்ப்பகுதிகளை கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசு தகவல்

111

புதுடெல்லி: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், வறட்சியில் தமிழக நகர்ப்பகுதிகள் நாட்டிலேயே முதல் இடத்தில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் பிரச்சனை நிலவி வருகிறது. இந்த சூழலில் மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், நாட்டில் உள்ள 855 மாவட்டங்களிலும், 756 நகராட்சி அமைப்புகளிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில் …

Read More »

மாயமான 142 நாளுக்கு பின் திருப்பதியில் மீட்பு முகிலனிடம் சிபிசிஐடி விசாரணை: பாலியல் புகாரில் திடீர் கைது

111

சென்னை: திருப்பதி ரயில் நிலையத்தில் 142 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட  சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனிடம் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஐஜி சங்கர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.  பின்னர் அவரை நாமக்கல் பெண் கொடுத்த பாலியல் புகாரில் போலீசார் திடீரென  கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  வருகிறது. ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முகிலன்(52). தமிழக  பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளராக …

Read More »