Breaking News
Home / தே.மு.தி.க. (DMDK) செய்திகள்

தே.மு.தி.க. (DMDK) செய்திகள்

விஜயகாந்தை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.. பிரேமலதாவும், சுதீஷும் வரவேற்பு

CM-1

சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். அப்போது தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் வருவதற்கே தேமுதிக இழுத்தடித்து ஒரு வழியாக கடைசியில் ஒப்புக் கொண்டது. இதையடுத்து அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், தமாகா, புதிய நீதி கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கிடுவது குறித்த பேச்சுவார்த்தை தற்போது …

Read More »

கெடுவார் கேடு நினைப்பார்.. நாரதர் கலகம் நல்லதில் முடிந்துவிட்டதே.. யாரை சொல்கிறார் பிரேமலதா?

222

சென்னை: கெடுவார் கேடு நினைப்பார் என்றும் நாரதர் கலகம் நல்லதில் முடிந்துவிட்டது என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார். இவர் திமுகவை மறைமுகமாக விமர்சிக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு பெரும் அளவில் இருந்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவிலிருந்து வந்தவுடன் நாடாளுமன்றத் தேர்தலில் தனது நிலைப்பாடு குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அதிமுகவுடன் தேமுதிக …

Read More »

கிழியாத சட்டையை கிழித்து போஸ் கொடுக்க மாட்டோம்.. ஸ்டாலினை கலாய்த்த பிரேமலதா!

333

சென்னை: திமுக மீது தனக்கு இருந்த அத்தனை கோபத்தையும் கொட்டி தீர்த்துவிட்டார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். திமுக திருட்டு கட்சி என்று குற்றஞ்சாட்டியது தொடங்கி, அதன் தலைவர் ஸ்டாலின் பொய் சொல்கிறார் என்பது வரை, பிரேமலதா இன்று பேசியது மொத்தமும் திமுகவிற்கு எதிரான அரசியல். சென்னையில் இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். சந்திப்பில் இவர் மிகவும் கோபமாக பேசினார். திமுக மீது கடுமையான விமர்சனங்களை …

Read More »

தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு என்ன? கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் இன்று இறுதிகட்ட ஆலோசனை

111

சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது குறித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் இன்று இறுதிகட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணியில் இணையலாமா? அல்லது தனித்து போட்டியிடலாமா? என்ற வகையில் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிறிய கட்சிகளை இணைத்து 3-வது அணி அமைத்து …

Read More »

இன்னும் சற்றுநேரத்தில் அறிவிப்பு.. முடிவெடுத்த விஜயகாந்த்.. தேமுதிக யாருடன் கூட்டணி?

5551

சென்னை: தேமுதிக தனது லோக்சபா தேர்தல் கூட்டணி அறிவிப்பை இன்று மதியம் வெளியிட முடிவு செய்து இருக்கிறது. கடைசியில் அந்த நாள் வந்துவிட்டது. மூன்று வாரமாக இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டு இருந்த தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு வழியாக முடிந்து இருக்கிறது. தேமுதிக எந்த கூட்டணியில் இணைய போகிறது, லோக்சபா தேர்தலில் எப்படி போட்டியிட போகிறது என்பதுதான் பெரிய கேள்வியாக இத்தனை நாட்கள் இருந்தது. தேமுதிக தொடர்ந்து பல்வேறு கட்சிகளுடன் லோக்சபா …

Read More »

நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்….. கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

222

சென்னை: சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த்  நாளை மறுநாள் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த்  உடல் நலம் குன்றிய நிலையில் அவ்வப்போது சிகிச்சைக்காக  வெளிநாடு சென்று  வருவது வழக்கம். உயர் சிகிச்சைகாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி விஜயகாந்த் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அவருடன்  அவரது  மனைவி பிரேமலதா,  அவரது 2-வது  மகன்  சண்முக  பாண்டியன்  ஆகியோர் உடன் …

Read More »

ரம்ஜான் வாழ்த்துக்கள்

”இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்கே”, என்ற அடிப்படையில் ஏழை, எளியவர்கள் மீது பரிவுகாட்டி, உண்ண உணவளித்து, உடுக்க உடைகொடுத்து, தானதர்மங்கள் செய்து, முப்பது நாட்கள் புனிதநோன்பினை முடித்துக்கொண்டு ரம்ஜான் திருநாளைக் கொண்டாடும் இந்த இனிய நாளில், அன்பு ஓங்கிட, அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட, சகோதரத்துவம் வளர்ந்திட வேண்டுமென இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

Read More »

சிவாஜி, கமலைவிட நன்றாக நடிக்கும் ஓபிஎஸ்-ஈபிஎஸ்: விஜயகாந்த் கடும் தாக்கு

111

விழுப்புரம்: சிவாஜி கணேசன், கமல்ஹாசனை விட ஓபிஎஸ், ஈபிஎஸ் நன்றாக நடிப்பதாக தேமுதிக பொதுச்செயலர் விஜயகாந்த் சாடியுள்ளார். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்காததை கண்டித்து விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விஜயாகாந்த் பேசியதாவது: ஜெயலலிதா அரசு 100 நாள் சாதனை 100 ஆண்டுகள் பேசும் என கூறினார்கள். ஆனால் ஓராண்டிலேயே ஜெயலலிதா மறைந்து போய்விட்டார். ஜெயலலிதா மறைந்த ஓராண்டில் லஞ்சத்திலும் ஊழலிலும்தான் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. டெங்கு காய்ச்சலுக்கு 40 …

Read More »

மெரினாவில் 144 தடை உத்தரவை அப்பவே போட்டிருந்தா பிரச்சனை வந்திருக்காது… உளறி கொட்டிய விஜயகாந்த்

1111

சென்னை: சென்னை மெரினாவில் 144 தடை உத்தரவை அப்பவே போட்டிருந்தா எந்த பிரச்சனையுமே வந்திருக்காது என உளறி கொட்டியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். ஜல்லிக்கட்டு எனும் பண்பாட்டு அடையாள மீட்புக்காக வரலாறு காணாத யுகப் புரட்சியை நடத்தியது தமிழக இளைஞர் படை. இன்று ஜல்லிக்கட்டு மீதான தடையை உடைத்து சரித்திரம் படைத்திருக்கிறது தீக்கிரையான நடுக்குப்பம் இந்த யுகப் புரட்சிக்காக நூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், மீனவர்கள் போலீசாரின் குண்டாந்தடிகளால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். …

Read More »

ஜெயலலிதா நலம் பெற்று வீடு திரும்பிய உடன் போயஸ்கார்டன் செல்வோம்: பிரேமலதா

222

திண்டுக்கல்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாக சந்திக்க அனுமதி அளித்தால் அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க விஜயகாந்துடன் நேரில் செல்வேன் என்று பிரேமலதா கூறியுள்ளார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய, கட்சி பாகுபாடின்றி தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பிற …

Read More »