Breaking News
Home / த.மா.கா. (TMC) செய்திகள்

த.மா.கா. (TMC) செய்திகள்

தமிழகத்துக்கு 31.24 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா காலம் தாழ்த்தாமல் திறந்துவிட வேண்டும்: ஜி.கே.வாசன்

222

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு 31.24 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டிருப்பது வறட்சியின் விளிம்பில் இருந்த தமிழக விவசாயிகளுக்கு கிடைத்திருக்கும் முதல் வெற்றி என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், “உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து மாநில பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். கூட்டத்தின் முடிவில் காவிரி …

Read More »

தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கையிடம் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்:

GK-vasan

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்கவும், சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணத்தைப் பெற்றுத்தரவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த சனிக்கிழமை கடலுக்கு விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். வலைகளை விரித்து மீன்பிடிக்க முயன்றபோது அங்கு வந்த இலங்கை கடற்படை மீனவர்களை சுற்றி வளைத்து அச்சுறுத்தினர். இதனால் …

Read More »

மாணவர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க தவறிவிட்டது

GK-vasan

  தமிழக மாணவர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க தவறிவிட்டது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மாணவர்களின் உரிமைகளுக்காக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார். ஆரம்பம் முதலே நீட் தேர்வில் குழப்பம் நீடித்ததால் மாணவர் மற்றும் பெற்றோர் மன உளைச்சல் அடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Read More »

தமாகாவில் இருந்து மாஜி எம்.எல்.ஏ. ராஜசேகர் விலகல்- அதிமுகவில் ஐக்கியமாகிறார்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகர் விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் தாம் அதிமுகவில் இணைய இருப்பதாகவும் ராஜசேகர் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இணைந்தது முதலே அக்கட்சி கலகலகத்து வருகிறது. தமாகாவின் முக்கிய தலைவர்களான எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், வேலூர் ஞானசேகரன் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இணைந்துவிட்டனர். பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் உள்ளிட்டோர் காங்கிரஸுக்கு திரும்பிவிட்டனர். தற்போது முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரும் …

Read More »

முக்கிய முடிவு எடுக்கிறோம் 11ம் தேதி செயற்குழுவைக் கூட்டுகிறோம் – ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் வருகிற 11ம் தேதி கூட்டப்படுகிறது. அன்று முக்கிய முடிவுகள் எடுத்து அறிவிக்கப்படும் என்று கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர வேண்டியது தமாகா. ஆனால் காலக் கோளாறால், தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில் போய்ச் சேர வேண்டியதாகி விட்டது. இதனால் கட்சியும் உடைந்தது. பீட்டர் அல்போன்ஸ் காங்கிரஸுக்குப் போய் விட்டார். எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் அதிமுகவுக்குப் போய் …

Read More »

எளிமை, நேர்மை, வெளிப்படையான ஆட்சி: இது தமாகாவின் தேர்தல் உறுதிமொழி

தமிழத்தில் எளிமை, நேர்மை, வெளிப்படையான ஆட்சியை மது இல்லாத தமிழகத்தை மக்கள் நலக்கூட்டணி – தேமுதிக – தமாகா மட்டுமே அளிக்க முடியும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தல் தேமுதிக கூட்டணியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தேனாம்பேட்டையில் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர், தேர்தல் உறுதிமொழி என்ற பெயரில் 43 பக்கங்கள் …

Read More »

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியானது: வாசன் போட்டியில்லை

சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ளார். மக்கள் நல கூட்டணி, தேமுதிக ஆகியவை இணைந்துள்ள கூட்டணியில் கூட்டணி வைத்துக்கொண்டுள்ளார் ஜி.கே.வாசன். அக்கூட்டணியில் வாசன் கட்சிக்கு 26 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மே 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வரும் 22ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் வாசன் இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். …

Read More »

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்கள் அதிருப்தி வாசனின் கூட்டணி முடிவால்?

மக்கள் நல கூட்டணி-தேமுதிக கட்சி கூட்டணியுடன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைப்பதில் இக்கட்சியின் மூத்த தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு உடன்பாடு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கட்சிக்குள் அதிருப்தி நிலவுகிறது. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அதிமுகவோடு கூட்டணி அமைக்க ஆசை கொண்டிருந்தது. ஆனால், வாசன் கட்சிக்கு 15 இடங்கள் வரை ஒதுக்கி தர ஜெயலலிதா முன்வந்ததாகவும், ஆனால், …

Read More »

தமாகா தேமுதிக – ம.ந.கூட்டணியில் இணைகிறது – 30 தொகுதிகள் ஒதுக்கீடு- இன்று அறிவிப்பு?

தேமுதிக – மக்கள் நலக்கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 30 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தற்போதைய அந்த கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகிற சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடும் அளவுக்கு த.மா.கா.வுக்கு பலம் இல்லை. மக்கள் விரும்பும் கூட்டணியில் தான் த.மா.கா இடம் பெறும் என்று ஜி.கே.வாசன் தொடர்ந்து கூறிவந்தார். பின்னர் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தமாகா ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது. …

Read More »

உறுதியான முடிவெடுக்காமல் கூட்டணி குறித்து தடுமாறும் ஜி.கே.வாசன். உடையுமா த.மா.கா?

சட்டசபை தேர்தலில் கூட்டணி தொடர்பாக உறுதியான எந்த ஒரு முடிவெடுக்கும் எடுக்காமல் தடுமாறி வரும் ஜி.கே.வாசனுக்கு எதிராக போர்க்கொடி தூக்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டசபை தேர்தலில் கூட்டணிகள் இறுதியாகி கட்சிகளுக்கான தொகுதிகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதிமுகவோ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு 5 முறை மாற்றமும் செய்துவிட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சிகளுக்கான தொகுதிகளும் …

Read More »