Breaking News
Home / விவசாயம்

விவசாயம்

Natural Farming

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனை பொருட்கள்: உதவித்தொகையுடன் செய்முறை பயிற்சி அளிக்கிறது அரசு நிறுவனம்

palm-materials3

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனைப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வசதி யாக சென்னை மாதவரத்தில் உள்ள மத்திய பனைப் பொருட் கள் பயிற்சி நிறுவனம் உதவித் தொகையுடன் பயிற்சி அளிக்கிறது. இந்தியாவில் இருந்த 6 கோடியே 50 லட்சம் பனைமரங் களில், தமிழ்நாட்டில் மட்டும் 4 கோடியே 50 லட்சம் பனை மரங்கள் இருந்தன. இப்போது 3 கோடியே 50 லட்சம் பனை மரங்கள் மட்டுமே உள்ளன. …

Read More »

அற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு!

goat-farm

160 ஆடுகள்… ஆண்டுக்கு ரூ 17 லட்சம்…கால்நடை ‘அஞ்சாறு ஆட்டை வாங்கி மேய்ச்சுக்கிட்டுருந்தாப் போதும்.. காலாட்டிகிட்டுச் சம்பாதிக்கலாம், யார்கிட்டயும் கைகட்டி நிக்க வேண்டியதில்லை’ என்று கிராமங்களில் சொல்வார்கள். அந்தக் கூற்றை உண்மை என நிரூபித்து வருகிறார், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி, ஜெயகுமார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் இருக்கிறது ஜெயகுமாரின் பண்ணை. ஒரு பகல்பொழுதில், பண்ணையில் இருந்த ஜெயகுமாரைச் சந்தித்தோம். “போளூர்தான் சொந்த ஊர். இது அப்பா …

Read More »

‘ஸ்மார்ட் சிட்டி’க்காக ஊருக்கு வெளியே போகும் 150 ஆண்டுகள் பழைமையான காந்தி மார்க்கெட்!

kandhi-market-tchy

திருச்சியில் 150 ஆண்டுகள் பழைமையான காந்தி மார்க்கெட்டை இடமாற்றம் செய்யும் விவகாரம் பூதாகரமாகியுள்ளது. திருச்சியின் மையப்பகுதியில் சுமார் 25 ஏக்கரில் காந்தி மார்க்கெட் அமைந்துள்ளது. போக்குவரத்து நெரிசல், சரக்கு வாகனங்களின் நெருக்கடியால் இது சிக்கித் திணறுகிறது. இதை இடமாற்றம் செய்து, திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கள்ளிக்குடியில் அமைக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.  கள்ளிக்குடியில் 10 ஏக்கரில், ரூ.77 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மார்க்கெட் …

Read More »

எட்டு வழி பசுமைச்சாலையில் புது பிரச்னை!

green-field-corridor-well

  “ஐயா… நாங்களும் இந்தியர்கள்தானய்யா. எங்களுக்கும் நாட்டின் மீது பற்று உண்டு. அதனாலதானய்யா சொல்றோம்… விவசாயம் செழிப்பா இருக்குற நிலமய்யா. இத அழிச்சிட்டு ரோடு போடுறது பாவமய்யா. பூமித்தாய்க்கு செய்யுற துரோகமய்யா…’’ – சேலம் மாவட்டம் பூலாவரி கிராமத்தில் இருக்கும் விவசாயி மோகனசுந்தரத்தின் குரல் இது. ‘‘சின்ன கல்வராயன் மலை, பல ஜீவராசிகள் வாழுற இடம். தும்பி பறக்குற வெளி தொடங்கி, யானை நடந்து போற பாதை வரைக்கும் இதை …

Read More »

சுவீடன் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரை இறுதியில் நுழைந்தது இங்கிலாந்து

fifa-2018--qf

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று 3-வது கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – சுவீடன் அணிகள் மோதின. சமரா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில்12-வது நிமிடத்தில் சுவீடன் வீரர் விக்டர் கிளாசன், பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து அடித்த பந்து கோல்கம்பத்துக்கு இடதுபுறம் அதிக உயரத்தில் வெளியே சென்றது. 19-வது நிமிடத்தில் ரஹீம் ஸ்டெர்லிங் உதவியுடன் பந்தை பெற்ற இங்கிலாந்தின் ஹாரி கேன், பாக்ஸ் …

Read More »

சென்னை உட்பட தமிழகத்தில் பரவலாக நேற்று இரவு மழை பெய்யக் காரணம்

rain2

மேற்கு திசை காற்றில் ஏற்பட்ட திசை மற்றும் வேக மாறுபாடின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சியை அடுத்த சமயபுரம் –  17 செ.மீ. மழையும், காஞ்சிபுரத்தில் – 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. அடுத்து 24 மணி நேரத்தைப் பொறுத்தரை வட தமிழகத்தில் ஒரு …

Read More »

பசுமை வழிச் சாலையால் யாருக்கு பலன்? விரைவான போக்குவரத்துக்கா? கனிமவள ஏற்றுமதிக்கா?

green-field-corridor-paddy

சேலம் – சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப் பில் 8 வழி பசுமைச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. சேலம் மாவட்டத்திலும் அதையொட்டிய தருமபுரி மாவட்டத்திலும் நிலவும் சூழல் குறித்து முந்தைய பகுதியில் விரிவாக விளக்கியிருந்தோம். தற்போது அந்த சாலை தருமபுரியைக் கடந்து கிருஷ்ணகிரியில் சிறிது எட்டிப்பார்த்துவிட்டு திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் நுழைகிறது. இந்த திட்டத்தின் 45 சதவீத நீளச்சாலை அதாவது 122 கிமீ தூரம் திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிறது. …

Read More »

தண்ணீர் என்பது ஒரு அரிய பொருள். காசைத் ‘தண்ணீர் போல செலவழிக்கிறான்’ கலங்கிய நீரைத் தெளிவிப்பது எப்படி?

TO-PURIFY-WATER

தண்ணீர் என்பது ஒரு அரிய பொருள். அது கிடைத்துக் கொண்டே இருந்தால் அதன் அருமை பெருமை தெரியாது. காசைத் ‘தண்ணீர் போல செலவழிக்கிறான்’ என்று ஊதாரி மகனைத் திட்டுவர் பெரியோர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘பாலும் தேனும் தண்ணீர் போல ஓடும்’ என்பர் அரசியல் கட்சியினர். ஆனால் உண்மையில் தண்ணீர் கிடைக்காததால் எவ்வளவோ நாகரீகங்கள் தலை நகர்களையே கூட மாற்றி இருக்கின்றன! ரிக்வேதம் முதல் திருவிளையாடல் புராணம் வரை வரும் …

Read More »

மாடியில் மரங்களையும் வளர்க்கலாம்

madi-thottam1

“மாடித்தோட்டம் என்றாலே காய்கறிகளையும், கீரைகளையும் மட்டும்தான் வளர்க்க முடியும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், கொஞ்சம் முயற்சி செய்தால் மாடித்தோட்டத்தில் மரங்களையும் வளர்க்க முடியும்” என்று சொல்வதோடு அதை நிரூபித்தும் காட்டியிருக்கிறார், சென்னையைச் சேர்ந்த லட்சுமி. சென்னை, ஜாபர்கான்பேட்டை, வேதாச்சலம் தெருவில் கடந்த 18 ஆண்டுகளாக மாடித்தோட்டம் அமைத்துப் பராமரித்து வருகிறார் லட்சுமி. ஒரு காலைப்பொழுதில் அவரது வீட்டை அடைந்தோம். எங்கு பார்த்தாலும் செடி, கொடிகள்… எனப் பசுமையாகக் காட்சியளித்தது, …

Read More »

வரகு, சாமை, குதிரைவாலி… – விவசாயிகளுக்கு வழிகாட்டும் மானாவாரி ஆராய்ச்சி நிலையம்!

Varagu-arisi

  அசத்தும் பருத்தி மற்றும் சோளம் ஆகியவற்றில் ஆராய்ச்சி செய்து… கோவில்பட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளின் தட்பவெப்ப நிலை மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ற பல ரகங்களை வெளியிட்டுள்ளது, கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையம். ஆங்கிலேயர் காலத்தில் துவக்கப்பட்டு, தற்போது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதன் செயல்பாடுகள், ஆராய்ச்சிபணிகள் குறித்துக் கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். முருகனிடம் பேசினோம். “கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், …

Read More »