Breaking News

குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடும் நிலையில் பேரவை தொடர் இன்று துவக்கம்: சபாநாயகர் மீது ஜூலை 1ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம்?

4333

சென்னை: தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை, விவசாயிகள் போராட்டம் மற்றும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. ஜூலை 1ம் தேதி (திங்கள்) சபாநாயகர் தனபால் மீது திமுக சார்பில்  கொடுத்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. பேரவை கூடுவதையொட்டி, திமுக மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அக்கட்சி தலைவர்கள் தலைமையில் இன்று நடைபெறுகிறது.தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மானிய கோரிக்கை மீதான …

Read More »

தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி

Modi Pm1

டோக்கியோ: ஜப்பானில் பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்திய பிரதமர் மோடி, ரஷிய அதபர் புதின், சீன அதிபர் ஸீ ஜிம்பிங் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பிரேசில் அதிபர் போல்சொனாரோ, தென்னாப்பிரிக்கா அதிபர் ரமபோசா ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மோடி பேச்சு: தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பருவநிலை மாற்றம், தீவிரவாதம் உலகத்திற்கு  …

Read More »

அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும்: டிரம்ப் டுவிட்டரில் கோரிக்கை

222

வாஷிங்டன்: 14-வது ‘ஜி-20’ உச்சி மாநாடு ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் 28-29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி கலந்து …

Read More »

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.10,000 ஆக உயர்வு: போக்குவரத்து விதிமீறலுக்கு 10 மடங்கு அபராதம்

333

புதுடெல்லி: மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில், புதிய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், போக்குவரத்து விதிமுறை மீறலுக்கான அபராதம் 10 மடங்கு வரை புதிய மசோதாவில் உயர்த்தப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. புதிய மோட்டார் வாகன சட்ட மசோதா கடந்த 2017ம் ஆண்டு …

Read More »

ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு

222

ஒசாகா: ஒசாகாவில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றடைந்தார். வரும் 28-29 ஆகிய தேதிகளில் ஜி 20 மாநாடு நடைபெறுகிறது. 14-வது ‘ஜி-20’ உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் நாளை தொடங்குகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, …

Read More »

வங்கக்கடலில் வரும் 30-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது: இந்திய வானிலை மையம் தகவல்

222

டெல்லி : வடக்கு வங்கக்கடலில் வரும் 30-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் கூறுவதாவது; வடக்கு வங்கக்கடலில் வரும் 30ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணம் ஜூன் 28 முதல் ஜூன் 30 வரை …

Read More »

தமிழகத்தில் மேலும் 104 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட அனுமதி கோரி ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பம்: விவசாயிகள் அதிர்ச்சி

111

சென்னை: தமிழகத்தில் மேலும் 104 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி, ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, 67 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனமும், 274 இடங்களில் அமைக்க வேதாந்தா நிறுவனமும் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன. ஆனால், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி தமிழகத்தில் …

Read More »

அயோத்தியில் அரசு கையகப்படுத்திய நிலத்தை ஆக்கிரமித்து ராமர் கோவில் கட்டுவோம்: சு.சுவாமி எச்சரிக்கை

SUBRAMANIAN SWAMY

சென்னை: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அரசு கையகப்படுத்திய நிலத்தை ஆக்கிரமிப்போம் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்தியில் பிரதமராக மீண்டும் மோடி பதவி ஏற்றது முதலே அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என முழங்கி வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி. அதேபோல் ராமர் பாலம் குறித்தும் தொடர்ந்து பேசுகிறார் சுப்பிரமணியன் சுவாமி. அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம்; இது தொடர்பாக வழக்குகளைப் போடப் …

Read More »

196 நாட்களுக்கு பிறகு சென்னை மக்களுக்கு வரப்பிரசாதம்… மழையால் மக்கள் மகிழ்ச்சி..!

Rain at taminlnadu

சென்னை: சென்னையில் 196 நாட்களுக்கு பிறகு மிதமான மழை பெய்து வருகிறது. கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில  வாரங்களாக சென்னையில் கோடை வெயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் இந்த வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக …

Read More »

ஸ்டெர்லைட் ஆலைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய வழக்கு: விசாரணை ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு

tamil-today1

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் தொடுத்த வழக்கை ஜூன் 27ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு கடந்த மே மாதம் வைக்கப்பட்டிருந்த சீலை அகற்ற வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. முன்னதாக, பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த …

Read More »