Breaking News

மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா எம்.பி அரவிந்த் சாவந்த்

222

மும்பை: 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், கூட்டணி அமைத்து  போட்டியிட்ட பாஜ 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்றொரு  கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 44 இடங்களிலும்  தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் வெற்றி பெற்றன. பா.ஜ-சிவசேனா கூட்டணிக்கு தேர்தலில் பெரும்பான்மை கிடைத்த போதிலும் முதல்வர்  பதவி பிரச்னை காரணமாக புதிய அரசு  அமையவில்லை. முதல்வர் …

Read More »

சென்னை உயர்நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் ஏ.பி சாஹி

111

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் 49வது  தலைமை நீதிபதியாக ஏ.பி சாஹி பதவியேற்றார். சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் ஏ.பி சாஹிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் முதல்வர் எடப்பாடி  பழனிசாமி, சபாநாயகர் தனபால், நீதிபதிகள், அமைச்சர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 1985ல் சட்டபடிப்பை முடித்த ஏ.பி சாஹி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியை தொடங்கினார். 2005ல் நீதிபதியாக …

Read More »

வெங்காய விலை உயர்வு: ஆப்கான், எகிப்து, ஈரான் மற்றும் துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம்…!

2222

டெல்லி: ஆப்கான், எகிப்து, ஈரான் மற்றும் துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கான் வெங்காய சந்தையில் இருந்துதான் நாடு முழுவதுக்குமான வெங்காயம் அனுப்பப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்திலும் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. இம்மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்ததன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் வெங்காய பயிர்கள் …

Read More »

முரசொலி நிலம் குறித்து உரிய நேரத்தில் ஆதாரங்களுடன் உண்மையை நிரூபிப்பேன்: இந்த உறுதியே வீண்பழி சுமத்துவோருக்கு இறுதி பதிலாக அமையும்… ஸ்டாலின் அறிக்கை

111

சென்னை: முரசொலி வெறும் நாளேடு மட்டுமல்ல; அது கலைஞரின் மூத்த பிள்ளை மட்டுமல்ல, ஒவ்வொரு திமுக தொண்டரின் உயிர் மூச்சு என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்; முரசொலி அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய தருணத்தில் நிரூபிப்பேன். பஞ்சமி நிலத்தினை வாங்கினோம் என்று மருத்துவர் ராமதாஸ் கடந்த மாதம் 17-ம் தேதி அறிக்கை …

Read More »

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்: ஒடிசா அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும்: இந்திய வானிலை மையம்

rain2

டெல்லி: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17ம் தேதி தொடங்கியது. அதன் பிறகு அரபிக்கடல் பகுதியில் 2 புயல்கள் உருவாகின. அதாவது, கடந்த 24ம் தேதி அரபிக்கடலில் நிலைகொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ‘கியார்’ என்ற தீவிர புயலாக மாறியது. இந்நிலையில் கடந்த இருநாட்களுக்கு முன்னர் ஓமனில் …

Read More »

பிரதமர் மோடியின் தூய்மை பணி தொடர்பாக கார்த்தி சிதம்பரம் பதிவிட்ட புகைப்படம் பொய்யானது: தனியார் பத்திரிகை ஆய்வில் தகவல்

222

சென்னை: மாமல்லபுர கடற்கரையில் பிரதமர் மோடியை புகைப்படம் எடுத்ததாக பரவும் புகைப்பட குழுவினர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை  நடத்துவதற்காக, கடந்த 11-ம் தேதி காலை சென்னை வந்த பிரதமர் மோடி, கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோ ஓட்டலில் தங்கினார். அன்றைய தினம் பிரதமர் மோடி இரவும் அங்கு தங்கினார். அதிகாலையில் எழுந்த மோடி,  கடற்கரையில் வாக்கிங் மற்றும் …

Read More »

வரும் 17-ம் தேதி அயோத்தி வழக்கின் இறுதி விசாரணை: டிசம்.10-ம் வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளதாக மாவட்ட நீதிபதி தகவல்

111

லக்னோ: அயோத்தியில் வரும் டிசம்பர் 10-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளதாக மாவட்ட நீதிபதி தெரிவித்து உள்ளார். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமி – பாபர் மசூதி நில விவகாரத்தை உச்ச  நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் நாள் தோறும் விசாரித்து …

Read More »

சென்னை, மாமல்லபுரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு மோடி-ஜின்பிங் இன்று வருகை: தலைவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடு

333

சென்னை: பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இன்றும், நாளையும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். இதையொட்டி சென்னை, மாமல்லபுரம் பகுதிகள் முழுவதும் பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இரு  நாட்டு தலைவர்களுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 63 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் சென்னை வருவதால், சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழிநெடுக பாரம்பரிய  முறையில் வரவேற்பு அளிக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பிரதமர் மோடியின் …

Read More »

சீன அதிபர் வருகையின் போது கிண்டி, வேளச்சேரி வழிதடத்தில் ரயில்கள் நிறுத்தப்படும் : தெற்கு ரயில்வே

222

சென்னை: வேளச்சேரி – கடற்கரை செல்லும் பறக்கும் ரயில்களும் தேவைப்பட்டால் சிறிது நேரம் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சீன அதிபர் இன்று சென்னை வரும்போது, தேவைப்பட்டால் கிண்டி வழித்தடத்தில் சிறிதுநேரம் ரயில்கள் நிறுத்தப்படும் என்றும், புறநகர், விரைவு ரயில்களை பல்லாவரம் பகுதியில் சிறிது நேரம் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜின்பிங் இன்று மதியம் …

Read More »

சீன அதிபர் ஜி ஜின் பிங் பயணம் செய்யும் சொகுசு காரின் சிறப்பம்சங்கள்…

111

சென்னை: சீன அதிபர் ஜி ஜின் பிங் பயணம் செய்வதற்காக சொகுசு கார் தனி விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள சிறப்பம்சங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஹாங்கி எல்-5 என்ற ரகத்தை சேர்ந்த 4 கார்கள் சென்னைக்கு சீன சரக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. ஹாங்கி என்றால் சீன மொழியில் செங்கொடி என்று அர்த்தமாம். FAW என்ற பாரம்பரியம் மிக்க சீன நிறுவனம் …

Read More »