Breaking News

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வரும் 13, 15-ம் தேதிகளில் ராகுல் காந்தி பிரச்சாரம்..!

222

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வரும் 13 மற்றும் 15-ம் தேதிகளில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்கிறார் என கட்சி தலைமை அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மேலும் காங்கிரஸ் …

Read More »

உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் மாமல்லபுரம் மோடி – ஜின்பிங் நாளை சந்திப்பு: 5000 போலீசார் குவிப்பு,.. எங்கும் சிசிடிவி கண்காணிப்பு

111

சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு சென்னை: பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் நாளை மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். இதையொட்டி அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து தனி விமானத்தில் 4 கார்கள் சென்னை வந்தது. தமிழக அரசு சார்பில் 58 பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜீ ஜின்பிங் 11ம் …

Read More »

பிரதமர் மோடி-சீன அதிபர் வருகையை முன்னிட்டு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: சென்னை விமான நிலையத்தில் கடும் கட்டுப்பாடு

111

சென்னை: இந்திய பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரம்  வருகையையொட்டி 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் செல்லவும், இறங்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீனாவிற்கு சமீபத்தில் சென்று இருந்தபோது இந்தியாவிற்கு வருமாறு சீனா அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்ற சீன அதிபர் ஜின்பிங் வரும் 11ம் தேதி இந்தியா வருகிறார்.இவர்களின் சந்திப்பு …

Read More »

மோடி – சீன அதிபர், மாமல்லபுரம் வருகையை ஒட்டி பேனர் வைக்க அரசுக்கு அனுமதி: விதிகளை மீறக்கூடாது என ஐகோர்ட் உத்தரவு

222

சென்னை: மாமல்லபுரத்தில் மூன்று நாள் நடைபெறும் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு பேனர் வைக்க அனுமதி அளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். மாமல்லபுரத்தில் அக்டோபர் 11, 12, 13ம் தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். பிரதமர் மற்றும் சீன அதிபரை பேனர்களை வைத்து வரவேற்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், பேனர் வைக்க …

Read More »

பெட்ரோல் மற்றும் டீசல் விலை சரிவு: வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி

111

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.21, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.15 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகிய காரணிகளால் கடந்த சில மாதங்களாக பெட்ரோல்-டீசல் …

Read More »

அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து பகவத்கீதையை நீக்க வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மாணவரணியினர் கைது!

333

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து பகவத்கீதையை நீக்க வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மாணவரணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தடையை மீறி அண்ணா பல்கலைக்கழகத்தை முற்றுகையிட முயன்றதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக மாணவரயினருக்கு ஆதரவாக திராவிட கழகத்தின் மாணவரணியினரும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த போராட்டமானது தடையை மீறி நடைபெற்றதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் கிண்டி-வேளச்சேரி சாலையில் பதற்றமான சூழல் நிலவி …

Read More »

பரமக்குடி அருகே பழங்கால உறைகிணறு : கீழடியை போன்று அகழாய்வு செய்ய வலியுறுத்தல்

222

பரமக்குடி: கீழடியை போன்று பரமக்குடி அருகே பழங்கால உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் தொல்லியல் துறை அகழாய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள பாம்பு விழுந்தான் கிராமத்தில் உள்ள ராக்கப் பெருமாள் கோயில் திருப்பணிக்காக பள்ளம் தோண்டிய போது புதைந்திருந்த உறைகிணறு வெளியே தெரிந்துள்ளது. உறைகிணற்றின் 4 அடுக்குகள் அளவுக்கு மண்ணை தோண்டி எடுத்த போது மண்பாண்டங்கள் உள்ளிட்ட பொருட்களும் கிடைத்துள்ளன. கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணறு 2,600 …

Read More »

சென்னை வந்த பிரதமர் மோடி புகழாரம் தொன்மையான மொழி தமிழ்: 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை நோக்கி வேகமாக முன்னேறுகிறோம்: ஐஐடி விழாவில் பேச்சு

111

சென்னை: சென்னை வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள் மத்தியில் பேசிய  அவர், ‘உலகின் தொன்மையான மொழி தமிழ்’ என்று புகழாரம் சூட்டினார். மேலும் ஐஐடி விழாவில் பேசிய அவர், ‘5 லட்சம் கோடி டாலர்  பொருளாதார இலக்கை நோக்கி நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது’ என்றும் தெரிவித்தார். ஐஐடியின் 56வது பட்டமளிப்பு விழா மற்றும் ‘ஹேக்கத்தான்’ என்ற தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு …

Read More »

ஒட்டுமொத்த தமிழர்களின் பெருமையாக கீழடி விளங்குகிறது; ஆய்வு செய்த பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

222

கீழடி: திமுக தலைவரும், தமிழக எதிர் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கீழடியில் ஆய்வு செய்தார். அவருடன் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உடனிருந்தார். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், ஒட்டுமொத்த தமிழர்களின் பெருமையாக கீழடி விளங்குவதாக தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2015ம் ஆண்டு முதல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 2 மற்றும் 3ம் கட்டமாக அகழாய்வு பணிகளை …

Read More »

25 ஆயிரம் கோடி ஊழல் வழக்குப்பதிவு; விசாரணைக்கு தற்போது வர வேண்டாம் என சரத்பவாருக்கு அமலாக்கத்துறை கடிதம்

111

மும்பை: மராட்டிய மாநிலத்தில் நஷ்டத்தில் இயங்கிய கூட்டுறவு வங்கிகளை விற்பனை செய்ததில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மீது அமலாக்கத்துறை சமீபத்தில் வழக்கு பதிவு செய்தது. ந்த வழக்கில் இதுவரை சம்மன் அனுப்பப்படாத நிலையில், பிற்பகல் 2 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகம் செல்ல இருப்பதாக சரத் பவார் கூறி இருக்கிறார். இதன் காரணமாக தெற்கு மும்பையில் பரபரப்பான சூழல் நிலவுவதால் பல இடங்களில் 144 …

Read More »