Breaking News

சென்னையில் 99.9 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளர்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேட்டி

Neduvasal

சென்னை: சென்னையில் 99.9 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி தெரிவித்துள்ளார். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ – ஜியோ அமைப்பினர், ஜன.22 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் …

Read More »

மாணவர்களின் எதிர்காலத்தை ஆசிரியர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் : அமைச்சர் ஜெயக்குமார்

Jayakumar

சென்னை: ஜாக்டோ-ஜியோவினர் பிடிவாதம் பிடித்தால் அரசு நடவடிக்கை எடுப்பது உறுதி என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், போராட்டத்தை கைவிட்டு அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தை ஆசிரியர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசு வருவாயில் 71 சதவீத பணம் அரசு ஊழியர்களின் சம்பளம், மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்டவைகளுக்கு …

Read More »

இந்து பெண்கள் மீது கை வைத்தால் கைகளை வெட்டுங்கள்… பாஜக அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே சர்ச்சை பேச்சு

Untitled-1

பெங்களூரு: இந்து பெண்கள் மீது கை வைப்பவர்களின் கைகளை வெட்டுங்கள் என்று பேசியிருக்கும் மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டேவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மாதாபுராவில் இந்து அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் சபரிமலை கோயிலுக்குள் நுழைந்த பெண்கள் குடகில் நுழைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக கூறினார். அந்த துரோகிகளுக்கு இடம் தர கூடாது என்றும் அவர்களை மண்ணோடு மண்ணாக்குங்கள் என்றும் …

Read More »

கத்திரிக்காய் முத்தினால்.. டாக்டர் ராமதாஸின் இன்னும் ஒரு பூடக டிவீட்!

Ramadoss11

சென்னை: மறுபடியும் ஒரு ட்வீட் போட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ். இந்த கத்தரிக்காய் ட்வீட் பல கேள்விகளையும், சந்தேகங்களையும் மறுபடியும் எழுப்பி உள்ளது. எம்பி தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பாமக இன்னும் யாருடன் கூட்டணி என்பதை சொல்லவில்லை. ஆனால் அரசல் புரசலாக வந்த விஷயங்களை வைத்து பாமக, அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்ற பேச்சுகள் அவ்வப்போது எழுந்தன. ஆனால் யாருடன் கூட்டணி என்பதை பற்றி நான்தான் சொல்லுவேன் என்று தெரிவித்த …

Read More »

தமிழக அரசுக்கு மேலும் சிக்கல்; ஜாக்டோ – ஜியோவுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த பள்ளி, கல்லூரி மாணவர்கள்

Neduvasal

திருவண்ணாமலை: ஜாக்டோ – ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருவண்ணாமலையில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ – ஜியோ அமைப்பினர், ஜன.22 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும் …

Read More »

தேர்தலுக்காக அதிமுக கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார்

111

சென்னை: தேர்தலுக்காக அதிமுக கூட்டணி கதவு திறந்தே இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடக்கும் பட்சத்தில் இரண்டிலும் அதிமுக வெற்றிபெறும். கொடநாடு விவகாரத்தில் எந்த விசாரணையையும் எதிர்கொள்ள நாங்கள் அதிமுக அரசு தயாராக உள்ளது. இவ்விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி குற்றம் செய்தோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். அதிமுகவில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தற்போது வரை தொடங்கப்படவில்லை. கூட்டணிக்கான …

Read More »

அமித்ஷாவின் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக பொய் கூறும் பாஜக: மம்தா புகார்

111

கொல்கத்தா: அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிரங்க அனுமதி மறுக்கப்படவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் மல்டாவில் இன்று நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் அமித்ஷா இன்று மேற்கு வங்கம் வருகிறார். இதற்காக  மல்டாவில் உள்ள விமான ஓடுபாதையில் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி கோரப்பட்டது. ஆனால், விமான நிலையத்தில் கட்டுமானப்பணி நடைபெறுவதாக கூறி அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்க …

Read More »

எடப்பாடி அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஊராட்சி சபை கூட்டம் நடத்துகிறோம்: ஸ்டாலின் பேச்சு

mk stalin 32

கரூர்: எடப்பாடி அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் ஈசனத்தத்தில் நடைபெற்றுவரும் ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்று ஸ்டாலின் பேசியதாவது: மக்கள் பிரச்சனையை பற்றி அதிமுக அரசு கவலைப்படுவதில்லை. முதல்வர் பதவியை பிடிக்கவே ஓபிஎஸ் யாகம் நடத்தியதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். தலைமைச்செயலகத்தில் யாகம் நடத்தியதை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே …

Read More »

பாரத் மாலா என்ற திட்டத்தின் கீழ் 4,000 கி.மீ புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க திட்டம்..!

salem-to-madras-road

டெல்லி: பாரத் மாலா திட்டத்தின் கீழ் புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரத் மாலா என்ற திட்டத்தின் கீழ் 4,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய பசுமை வழிச்சாலைகளையும், மேலும் 3,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு எக்ஸ்பிரஸ் விரைவுச் சாலைகளையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வருங்காலத்தில் பெரும்பாலான நெடுஞ்சாலைகள் பசுமை வழிச்சாலைகளாகவே அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பாட்னா-ரூர்கேலா, ஜான்சி-ராய்புர், சோலாப்பூர்-பெல்காம், பெங்களூர்-கடப்பா-விஜயவாடா, கோரக்பூர் -பரேலி …

Read More »

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜர்

tamil-today1

சென்னை : ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார். ஏற்கனவே 3 முறை சம்மன் அனுப்பப்பட்டு ஆஜராகாத நிலையில் தற்போது விஜயபாஸ்கர் ஆணையத்தில் ஆஜராகி உள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அரசு சார்பில் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு தரப்பினரை விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. இதில் ஏற்கெனவே ஐஏஎஸ், …

Read More »