Breaking News
Home / Tag Archives: இந்தியா

Tag Archives: இந்தியா

வாயு புயல் குஜராத்தை தாக்காது: இந்திய வானிலை மையம் தகவல்

bail-storm2

குஜராத்: அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள வாயு புயல் போர்பந்தர் – துவாரகா இடையே கடற்கரையை ஒட்டி கரையை கடக்கிறது. வாயு புயல் குஜராத்தை தாக்காது என வானிலை மையம் அறிவித்துள்ளது. வடமேற்கு திசை நோக்கி நகரும் புயல் சவுராஷ்டிரா கடலோர மாவட்டங்களை முதலில் தாக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வாயு புயல் குஜராத் கடற்கரையில் இருந்து 420 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. புயல் கரையை கடக்கும் …

Read More »

மேற்குவங்கத்தில் யோகி ஆதித்யநாத், ஸ்மிருதி இராணி பிரச்சாரம் செய்ய தடை

444

கொல்கத்தா : நாடு முழுவதும் 17வது மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 6 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளது. இறுதிகட்ட தேர்தல் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலத்திலங்களில் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் பிரச்சாரத்தில் தேசிய தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ராகுல்காந்தி, மோடி, அமித்ஷா, மம்தா பானர்ஜி, மாயாவதி, சந்திரபாபு நாயுடு ஆகிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் மட்டுமல்லாது தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் பணியாற்றி வருகின்றனர். …

Read More »

ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்பு

333

நியூசிலாந்து சம்பவத்துக்கு பழிவாங்கவே தாக்குதல் * நாடாளுமன்றத்தில் அமைச்சர் பரபரப்பு தகவல் * இலங்கையில் பலி எண்ணிக்கை 321 ஆனது கொழும்பு: இலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பழிவாங்கவே இலங்கையில் தேவாலயங்கள் மீது குண்டுவெடிப்பு நடத்தப்பட்டிருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்த்தனே பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இலங்கை தலைநகர் கொழும்பில் …

Read More »

மோடி குறித்து இம்ரான் கான் சொல்லிய கருத்து வேறு விதமாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது : பாக்., அரசு விளக்கம்!

111

இஸ்லமாபாத் : பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசியதற்கு அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் மக்களவை தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான அமைதி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து பிரதமர் மோடிக்கு ஆதரவாக இம்ரான்கான் பேசியிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் இம்ரான்கானுடன் …

Read More »

எல்லையில் பதற்றம்……. காஷ்மீரில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிப்பு

111

ஜம்மு-காஷ்மீர்: காஷ்மீரில் பாகிஸ்தான் போர் விமானங்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால், பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. நேற்று  இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமைதகர்த்தெறிந்தது. இந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது. …

Read More »

இந்தியா – பாகிஸ்தான் இடையே ஆபத்தான சூழ்நிலை: புல்வாமா தாக்குதலை அடுத்து டிரம்ப் பேட்டி

333

வாஷிங்டன்: இந்தியா – பாகிஸ்தான் இடையே ஆபத்தான சூழ்நிலை நிலவுவதாக புல்வாமா தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேட்டியளித்துள்ளார். ஜம்மு – காஷ்மீர் மாநில புல்வாமா அருகே நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே மிகவும் மோசமான சூழ்நிலை நிலவுவதாகவும், மிகவும் ஆபத்தான சூழ்நிலை நிலவுவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனை நிறுத்த தற்போது முயற்சி மேற்கொண்டு …

Read More »

தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும்: புல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்

666

வாஷிங்டன்: காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் மத்திய அரசுக்கு உதவ தயார் என்று அமெரிக்கா அறிவித்திருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் கொடூரமான தீவிரவாத தாக்குதலை ராணுவத்தினர் நேற்று எதிர்கொண்டுள்ளனர். புல்வாமா மாவட்டத்தில் காரில் 350 கிலோ வெடிகுண்டை நிரப்பிக்கொண்டு ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் சிஆர்பிஎப் வீரர்கள் 50 பேர் உயிரிழந்தனர். மேலும் …

Read More »

இன்று காந்தி நினைவு தினம்.. காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றது எப்படி?.. கல்யாணம் அளித்த தகவல்

111

டெல்லி: மகாத்மா காந்தியடிகளை நாதுராம் கோட்சேவால் நெருங்க முடிந்தது எப்படி என்ற தகவலை காந்தியின் உதவியாளர் கல்யாணம் தெரிவித்துள்ளார். காந்தியடிகள் கடந்த 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையொட்டி இன்றைய தினம் காந்தியடிகளின் நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. காந்திஜியை கோட்சே எப்படி கொலை செய்தார் என்பது குறித்து அவரது உதவியாளர் கல்யாணம் (96) ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு அண்மையில் பேட்டியளித்தார். …

Read More »

There is no room for absolutism and there is no room for anarchism also. அனைத்து அதிகார மும் தனக்கே அதே போன்று அராஜகத்துடனும் அவர் நடந்துகொள்ள முடியாது”

supreme-court

தில்லி துணை நிலை ஆளுநர் சுயேச்சையாக செயல்பட அதிகாரம் கிடையாது; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்திடம்தான் உண்மையான அதிகாரம் இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது. இத்தீர்ப்பு அத்துமீறிச் செயல்படுகிற தமிழக மற்றும் புதுவை ஆளுநர்களுக்கும் சம்மட்டி அடியாக வந்துள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து பேரடங்கிய அமர்வில் பெரும்பான்மை நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பில் நிலம், காவல்துறை மற்றும் சட்டம்-ஒழுங்கு ஆகியவை தவிர மற்ற …

Read More »

நாட்டின் 14-வது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது!

PE

டெல்லி/சென்னை: நாட்டின் 14-வது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த வாக்குப் பதிவு மாலை 5 மணிவரை நடைபெறும். இதற்கான அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக ராம்நாத் கோவிந்தும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீராகுமாரும் களத்தில் உள்ளனர். 4896 பேர் வாக்களிப்பு நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலகங்களில் இந்த வாக்குப் பதிவு நடைபெறும். காலை …

Read More »