Breaking News
Home / Tag Archives: உலகம்

Tag Archives: உலகம்

மத்தியஸ்தம் தேவையில்லை என்பது இந்தியாவின் நிலைப்பாடு: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்துக்கு வெளியுறவு அமைச்சகம் பதில்

2222

டெல்லி: காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் தேவையில்லை என்பது இந்தியாவின் நிலைப்பாடு என்பது அனைவருக்கும் தெரியும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த 10-ம் தேதி வெள்ளை மாளிகையில்  செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மோதல் இருப்பதாக குறிப்பிட்டார். ஆனால், இரண்டு வாரங்களுக்கு முன்னர் இருந்த நிலையோடு ஒப்பிடும்போது மோதலில் சற்று  அனல் தணிந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்ற நிலை …

Read More »

ஜி-7 மாநாட்டின் இடையே இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப்-பிரதமர் மோடி பேச்சுவார்த்தை: முக்கிய பிரச்னை குறித்து ஆலோசனை

222

பாரிஸ்: ஜி 7 மாநாட்டின் இடையே இன்று பிற்பகல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு நடக்கிறது. வளர்ச்சி அடைந்த  நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ள இந்த அமைப்பில் இந்தியா இடம் பெறவில்லை. இருந்தாலும், இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும்படி,  …

Read More »

அரசியல், ராணுவ உறவு நன்றாக இருந்தாலும், வர்த்தக உறவு சொல்லிக்கொள்ளும்படி இல்லை : இந்தியா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு

222

வாஷிங்டன்: அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா கூடுதல் வரி விதிப்பதாக அந்த நாட்டின் அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். மேலும், முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை அவர் சமீபத்தில் நீக்கினார். அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே இரு தரப்பு அரசியல், ராணுவ உறவு நன்றாக இருந்தாலும், வர்த்தக உறவு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் உருக்கு, அலுமினிய பொருட்களுக்கான வரியை, கடந்த ஆண்டு, 25 சதவீதம் அமெரிக்கா அதிகரித்தது.  …

Read More »

அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும்: டிரம்ப் டுவிட்டரில் கோரிக்கை

222

வாஷிங்டன்: 14-வது ‘ஜி-20’ உச்சி மாநாடு ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் 28-29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி கலந்து …

Read More »

உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்…

333

குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்திட உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ம் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. 2006 அக்டோபர் 10 ம் தேதி முதல் வீடு, சாலையோர கடைகள், ஓட்டல்கள் …

Read More »

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தலைவராக இந்தியர் தேர்வு

333

வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை தலைவராக இந்திய வம்சாவளி பெண் எம்.பி. தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் பிரமிளா ஜெயபால் (51) எம்.பி.யாக உள்ளார். அமெரிக்க குடியுரிமை பெற்றவர் இவர். அமெரிக்க நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய – அமெரிக்க பெண் இவர் தான். அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ்சபையான பிரதிநிதிகள் சபையின் இடைக்கால தலைவராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதன் மூலம் …

Read More »

நாளை மறுநாள் 6-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு : இன்று மாலை பிரச்சாரம் ஓய்வதால் தலைவர்கள் தீவிர பிரச்சாரம்

333

புதுடெல்லி: 6-ம் கட்டமாக தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளில் இன்று மாலை பிரச்சாரம் ஓய்கிறது. 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பீகார் – 8, அரியானா – 10, ஜார்கண்ட் – 4,மத்தியபிரதேசம் – 8, உத்திரபிரதேசம் – 14, மேற்குவங்கம் – 8, டெல்லியில் 7 தொகுதிகள் என மொத்தம் 59 நாடாளுமன்ற தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் …

Read More »

முற்றுகிறது அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போர் :சீன பொருட்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இறக்குமதி வரி உயர்வதாக டிரம்ப் அறிவிப்பு

333

வாஷிங்டன் : சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை மேலும் அதிகரிக்க போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போர் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மறைமுக வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் இறக்குமதி வரியை உயர்த்தி வருகின்றன.இதை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், சீன அதிபர் ஸ ஜின்பிங்கும் கடந்த …

Read More »

வடகொரிய அதிபர் கிம் ஜோங்குடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ட்ரம்ப் தயார்

333

வாஷிங்டன் : அணு ஆயுத பரவலை தடுக்க கிம் ஜோங் உன்னுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் தயாராக இருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி அமெரிக்கா-வடகொரியா இடையே முதல் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது இரு நாடுகள் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தில், கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக ஆக்குவதற்கு ஏற்ற …

Read More »

ஜம்மு காஷ்மீரில் இந்திய விமானப்படையின் போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து: 2 விமானிகள் பலி

222

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் பத்காம் பகுதியில் இந்திய விமானப்படையின் போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் 2 விமானிகள் பலியாகினர். காஷ்மீரில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகள் மற்றும் எல்லையில் தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக இந்திய ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் சென்று நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் மிகப்பெரிய முகாம் அழிக்கப்பட்டது. இதில் …

Read More »