Breaking News
Home / Tag Archives: நன்றி விகடன்

Tag Archives: நன்றி விகடன்

அற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு!

goat-farm

160 ஆடுகள்… ஆண்டுக்கு ரூ 17 லட்சம்…கால்நடை ‘அஞ்சாறு ஆட்டை வாங்கி மேய்ச்சுக்கிட்டுருந்தாப் போதும்.. காலாட்டிகிட்டுச் சம்பாதிக்கலாம், யார்கிட்டயும் கைகட்டி நிக்க வேண்டியதில்லை’ என்று கிராமங்களில் சொல்வார்கள். அந்தக் கூற்றை உண்மை என நிரூபித்து வருகிறார், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி, ஜெயகுமார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் இருக்கிறது ஜெயகுமாரின் பண்ணை. ஒரு பகல்பொழுதில், பண்ணையில் இருந்த ஜெயகுமாரைச் சந்தித்தோம். “போளூர்தான் சொந்த ஊர். இது அப்பா …

Read More »

மாடியில் மரங்களையும் வளர்க்கலாம்

madi-thottam1

“மாடித்தோட்டம் என்றாலே காய்கறிகளையும், கீரைகளையும் மட்டும்தான் வளர்க்க முடியும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், கொஞ்சம் முயற்சி செய்தால் மாடித்தோட்டத்தில் மரங்களையும் வளர்க்க முடியும்” என்று சொல்வதோடு அதை நிரூபித்தும் காட்டியிருக்கிறார், சென்னையைச் சேர்ந்த லட்சுமி. சென்னை, ஜாபர்கான்பேட்டை, வேதாச்சலம் தெருவில் கடந்த 18 ஆண்டுகளாக மாடித்தோட்டம் அமைத்துப் பராமரித்து வருகிறார் லட்சுமி. ஒரு காலைப்பொழுதில் அவரது வீட்டை அடைந்தோம். எங்கு பார்த்தாலும் செடி, கொடிகள்… எனப் பசுமையாகக் காட்சியளித்தது, …

Read More »

ஆபரேஷன் Center Mass

‘போர்க்களத்தில்தான் பதுங்கு குழிக்குள் படுத்துக்கொண்டு துப்பாக்கியால் சுடுவார்கள். அப்படித்தான் தூத்துக்குடியில் வேனில் ஏறிப் படுத்துக்கொண்டு பாதுகாப்பாக ஊர்ந்து போய் சுட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு இடுப்புக்கு மேலேயே குண்டுகள் பாய்ந்திருக்கின்றன. போலீஸ் நண்பர் ஒருவர். ‘Center Mass பற்றி விசாரியுங்கள்’ என க்ளூ கொடுத்தார். அதுபற்றி விசாரித்தேன். தூத்துக்குடியில் துப்பாக்கிகளைக் கையாண்டவர்களுக்கு ‘ஆபரேஷன் Center Mass’ தகவல் போய்ச் சேர்ந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். ‘‘அது என்ன Center Mass?’’ ‘‘துப்பாக்கியால் சுடும் …

Read More »

குழந்தையை ஒரு பொம்மை போல வளர்க்காதிர்கள்

  இன்றைய கால சூழலில் கூட்டுக் குடும்பம் என்பது அரிதாகி, தனிக்குடும்பங்கள் அதிகரித்து வருகிறது. ஒரு வீட்டிற்கு ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகளே இருக்கின்றனர். அதனால் வீட்டில் குழந்தைகள் ராஜ்ஜியமே. அவர்களுக்கு பிடித்த மாதிரியே வீட்டில் நடக்கும். வீட்டிலுள்ளவர்களும் நடந்து கொள்வார்கள். என்ன கேட்டாலும் கிடைக்கும். வீட்டில் அம்மாவுடன் சுற்றித்திரிந்த குழந்தை 2 அல்லது 2.5 வயதானதும் பள்ளிக்குள் அடியெடுத்து வைக்கிறது. பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றதுமே அழுது அடம் …

Read More »

தலைக்கடன் – இமையம்

மகளிர் காவல் நிலையத்தின் வாசலுக்குச் சற்றுத் தள்ளி, கிழக்கிலிருந்த இலுப்பை மரத்தின் நிழலில் உட்கார்ந்திருந்த தன்னுடைய அம்மா, அண்ணன், அண்ணியை நோக்கி, இடுப்பிலிருந்த குழந்தையுடன் சாலையைக் கடந்துவந்தாள் சீனியம்மா. “புள்ளக்கி என்னா வாங்கிக் கொடுத்த?” என்று மேகவர்ணம் கேட்டாள். அதற்குச் சீனியம்மா பட்டும்படாமலும் “டீயும் பன்னும்தான்” என்று சொன்னாள். காவல் நிலையத்தின் பக்கம் பார்த்தாள். பிறகு, தலையைக் கவிழ்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த தன்னுடைய அண்ணன் சுந்தரத்தைப் பார்த்ததும் சீனியம்மாவுக்கு அழுகை வந்துவிட்டது. …

Read More »