Breaking News
Home / Tag Archives: பா.ஜ.க. (BJP)

Tag Archives: பா.ஜ.க. (BJP)

உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் மாமல்லபுரம் மோடி – ஜின்பிங் நாளை சந்திப்பு: 5000 போலீசார் குவிப்பு,.. எங்கும் சிசிடிவி கண்காணிப்பு

111

சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு சென்னை: பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் நாளை மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். இதையொட்டி அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து தனி விமானத்தில் 4 கார்கள் சென்னை வந்தது. தமிழக அரசு சார்பில் 58 பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜீ ஜின்பிங் 11ம் …

Read More »

சென்னை வந்த பிரதமர் மோடி புகழாரம் தொன்மையான மொழி தமிழ்: 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை நோக்கி வேகமாக முன்னேறுகிறோம்: ஐஐடி விழாவில் பேச்சு

111

சென்னை: சென்னை வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள் மத்தியில் பேசிய  அவர், ‘உலகின் தொன்மையான மொழி தமிழ்’ என்று புகழாரம் சூட்டினார். மேலும் ஐஐடி விழாவில் பேசிய அவர், ‘5 லட்சம் கோடி டாலர்  பொருளாதார இலக்கை நோக்கி நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது’ என்றும் தெரிவித்தார். ஐஐடியின் 56வது பட்டமளிப்பு விழா மற்றும் ‘ஹேக்கத்தான்’ என்ற தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு …

Read More »

தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி

Modi Pm1

டோக்கியோ: ஜப்பானில் பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்திய பிரதமர் மோடி, ரஷிய அதபர் புதின், சீன அதிபர் ஸீ ஜிம்பிங் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பிரேசில் அதிபர் போல்சொனாரோ, தென்னாப்பிரிக்கா அதிபர் ரமபோசா ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மோடி பேச்சு: தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பருவநிலை மாற்றம், தீவிரவாதம் உலகத்திற்கு  …

Read More »

இன்று பதவியேற்பு விழா: மத்திய அமைச்சரவை குறித்து நரேந்திர மோடியுடன் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா 3-வது நாளாக ஆலோசனை

2222

டெல்லி: டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நரேந்திர மோடியுடன் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா 3-வது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார். நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி  கடந்த 19ம் தேதி வரை 7  கட்டங்களாக நடத்தப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி 350 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டும் 303 …

Read More »

ராகுல் போட்டியிடும் வயநாடு உட்பட 115 தொகுதியில் நாளை 3ம் கட்ட வாக்குப்பதிவு: களத்தில் அமித் ஷா, முலாயம் சிங், ஜெயபிரதா

333

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு உட்பட 115 மக்களவை தொகுதியில் நாளை 3ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் அமித் ஷா, முலாயம் சிங், ஜெயபிரதா உள்ளிட்ட பிரபலங்கள் போட்டியடுகின்றனர். உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம், கோவா, ஒடிசா, சட்டீஸ்கர், அசாம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள 115 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதேபோல், குஜராத் …

Read More »

டெல்லியில் பாஜக உயர்நிலை கூட்டம் அவசரமாக கூடுகிறது : பிரச்சார யுக்திகள் மாற்றுவது தொடர்பாக ஆலோசனை!

Modi Pm1

புதுடெல்லி : இந்தியாவின் 17வது மக்களவை தேர்தல் முதல்கட்டமாக நேற்று தொடங்கியது. இந்நிலையில், இன்று பாஜக உயர்நிலை கூட்டம் அவசரமாக கூடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் மூத்த நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் நேற்று முடிந்த 20 மாநில மக்களவை தேர்தல் ஓட்டுப்பதிவு மற்றும் மத்திய அரசின் மீதான மக்கள் மத்தியில் நிலவும் எண்ணங்கள் ஆகியன குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக …

Read More »

வாரணாசியில் வளர்ச்சி பணிகளுக்கு சமாஜ்வாதி அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை : பிரதமர் மோடி குற்றச்சாட்டு

4444

வாரணாசி : வாரணாசியில் வளர்ச்சி பணிகள், நகரை அழகுபடுத்துதல் உள்ளிட்ட திட்டங்களுக்கு உ.பி.,யில் ஆட்சி செய்த சமாஜ்வாதி அரசு மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேசத்தில் உள்ள தனது தொகுதியான வாரணாசிக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, காசி விஸ்வநாதர் கோவிலில் வழிபாடு செய்தார். இதனை தொடர்ந்து கோவிலில் வளாகத்தில் விரிவாக்க கட்டிடம் கட்டும் பணி உள்ளிட்ட பல பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் …

Read More »

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் குறித்து ஆலோசனை

Modi Pm1

புதுடெல்லி:  இந்திய விமானப்படை வீரர் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் மத்திய அமைச்சரவை இன்று மாலை ஆலோசனை நடத்துகிறது. இந்திய விமானி பாகிஸ்தானில் சிறைபிடிப்பு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடி தரும் விதமாக, இந்திய விமானப்படையின் மிராஜ்-2000 போர் விமானங்கள், நேற்று முன்தினம் அதிகாலை எல்லை கட்டுப்பாடு கோட்டை தாண்டி, பாகிஸ்தான் …

Read More »

அமித்ஷா கேட்ட அந்த ஒரு கேள்வி.. உற்சாகத்தில் ஆரவாரம் செய்த பாஜகவினர்

222

ராமநாதபுரம்: ஒரே ஒரு கேள்விதான் கேட்டார் அமித்ஷா.. சுற்றியிருந்த பாஜக தொண்டர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்து விட்டனர். அதிமுக தலைமையில், பாஜக கூட்டணி அமைத்து தேர்தல் களம் காணவிருக்கின்றனர். இதனையொட்டி, தமிழகத்தில் முதன்முதலாக தேர்தல் பணிகளை துவக்கி தொண்டர்களை உற்சாகப்படுத்த அமித்ஷா ராமநாதபுரம் வந்திருந்தார். அத்துடன் ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியில் பாஜகவின் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றார். அப்போது அவர் பேசியபோது, “தமிழகத்தில் ஒரு சில …

Read More »

நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி… கூட்டணி முடிவு நாளை அறிவிக்க வாய்ப்பு?

2222

திருப்பூர்: திருப்பூரில் நாளை நடைபெறும் அரசு விழாவுக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூரில் நாளை நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நாளை பிற்பகல் 2.30 மணியளவில் தனி விமானம் மூலம் கோவை வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பெருமாநல்லூர் செல்லும் அவர் பல்வேறு திட்டங்களுக்கு …

Read More »