Breaking News
Home / Tag Archives: பா.ம.க. (PMK)

Tag Archives: பா.ம.க. (PMK)

தமிழகத்தில் அரசியல் சூழல் மாறியதால் அதிமுகவுடன் கூட்டணி: அன்புமணி விளக்கம்

222

சென்னை: தமிழகத்தில் அரசியல் சூழல் மாறியதால் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக-பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது. இதற்காக பாமகவுக்கு அதிமுக 7 மக்களவை சீட்டும், 1 மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்த பாமக திடீரென கூட்டணி வைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கூட்டணி தொடர்பாக …

Read More »

பா.ம.க. தயாரித்த நிழல் பட்ஜெட்… டாக்டர். ராமதாஸ் இன்று வெளியிட்டார்

Ramadoss122

சென்னை: பாமக தயாரித்த 2019-2020-ம் ஆண்டுக்கான, 17-வது பொது நிழல் பட்ஜெட்டை டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். பா.ம.க. கடந்த 2003-2004-ம் ஆண்டு முதல் பொது நிழல் பட்ஜெட் அறிக்கைகளை மக்கள் மன்றத்தில் வெளியிட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 16 நிழல் பட்ஜெட் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், 2019-2020-ம் ஆண்டுக்கான, 17-வது பொது நிழல் பட்ஜெட் இன்று சென்னை தியாகராயநகர் பர்கிட் சாலையில் உள்ள பா.ம.க. அலுவலகத்தில் பா.ம.க. நிறுவனர் …

Read More »

கத்திரிக்காய் முத்தினால்.. டாக்டர் ராமதாஸின் இன்னும் ஒரு பூடக டிவீட்!

Ramadoss11

சென்னை: மறுபடியும் ஒரு ட்வீட் போட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ். இந்த கத்தரிக்காய் ட்வீட் பல கேள்விகளையும், சந்தேகங்களையும் மறுபடியும் எழுப்பி உள்ளது. எம்பி தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பாமக இன்னும் யாருடன் கூட்டணி என்பதை சொல்லவில்லை. ஆனால் அரசல் புரசலாக வந்த விஷயங்களை வைத்து பாமக, அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்ற பேச்சுகள் அவ்வப்போது எழுந்தன. ஆனால் யாருடன் கூட்டணி என்பதை பற்றி நான்தான் சொல்லுவேன் என்று தெரிவித்த …

Read More »

நீட் தேர்வை அடியோடு எதிர்க்க வேண்டும்; மத்திய அரசின் வலையில் விழக் கூடாது: ராமதாஸ்

ramados1

நீட் தேர்வை அடியோடு அகற்றுவதற்கான சட்டப் போரை முழு வீச்சில் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்துவதற்காக தேசிய தேர்வு முகமை என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ள மத்திய அரசு, அதன் மூலம் அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு இரு முறை நீட் தேர்வு கணினி மூலம் நடத்தப்படும் …

Read More »

தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை வேண்டும்: ராமதாஸ்

111

காட்டுமன்னார்கோவில் அருகே விவசாயி தற்கொலைக்கு காரணமான தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை அடுத்த கருணாகரநல்லூரில், தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் டிராக்டரை பறிமுதல் செய்து சென்றதால் அவமானமடைந்த தமிழரசன் என்ற விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவுக்கு …

Read More »

யுஜிசியை கலைத்துவிட்டு உயர்கல்வி ஆணையமா?

222

உயர்கல்வி ஆணையம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவின் உயர்கல்வி ஒழுங்குமுறை அமைப்பான பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்து விட்டு, அதற்கு மாற்றாக இந்திய உயர்கல்வி ஆணையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான வரைவு மசோதாவை மத்திய மனிதவள அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள மத்திய அரசு, இதுகுறித்த கருத்துக்களை …

Read More »

ரத்த தானம் வழங்குமாறு காவலர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்

333

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெருமைக்காக ரத்த தானம் வழங்குமாறு காவலர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ்   வெளியிட்ட அறிக்கையில், “காவல்துறை சார்பில் வரும் 29 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி முன்னிலையில் நடைபெறவுள்ள ரத்த தான முகாமில் 40 வயதுக்குட்பட்ட காவலர்கள் அனைவரும் கண்டிப்பாக ரத்த தானம் செய்ய வேண்டும் என ஆணையிடப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அதிக அளவில் ரத்த …

Read More »

தமிழ் உள்ளிட்ட 17 மொழிகளை மத்திய அரசு நீக்கக்கூடாது

anbumani

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ் உள்ளிட்ட 17 மொழிகளை மத்திய அரசு நீக்கக்கூடாது என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான மொழி வாய்ப்புகள் பட்டியலில் இருந்து தமிழ் உள்ளிட்ட 17 மாநில மொழிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கும் நோக்கத்துடன் …

Read More »

தேர்வு ரத்து, கடலூரில் எய்ம்ஸ்… அசத்தல் திட்டங்நீட்களுடன் பாமகவின் நிழல் நிதி அறிக்கை வெளியீடு

111

சென்னை: நீட் தேர்வு ரத்து, கடலூரில் எய்ம்ஸ் அமைப்பது, 3 ஆண்டுகளுக்கு பஸ் கட்டணம் உயராது உள்ளிட்ட மக்களை கவரும் திட்டங்களுடன் பாமக 16-ஆவது ஆண்டாக நிழல் நிதி அறிக்கையை நேற்று தாக்கல் செய்தது. ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் நிழல் நிதி நிலை அறிக்கையில் இந்த ஆண்டு 94 தலைப்புகளில் மொத்தம் 417 ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் அரசு நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை உறுதி செய்ய தமிழ்நாடு பொறுப்புடைமை ஆணையம் …

Read More »

ஓவர், ஓவர் ஒரு வாக்கி டாக்கிக்கு இந்த விலை ஓவர்… ராமதாஸ் அம்பலப்படுத்தும் “வா டா” ஊழல்!

333

சென்னை : வாக்கி டாக்கி கொள்முதல் செய்ய வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : “வேலியே பயிரை மேய்வதைப் போன்று, தமிழகத்தில் நடக்கும் ஊழல்கள் குறித்து விசாரித்துத் தடுக்கவேண்டிய அமைப்பான காவல்துறையில், மிகப்பெரிய அளவில் ஊழலும் முறைகேடுகளும் நடந்துள்ளன. காவல்துறைக்கு வாக்கி -டாக்கி வாங்குவதில் நடந்த முறைகேடுகள் …

Read More »