Breaking News
Home / Tag Archives: ம.தி.மு.க. (MDMK)

Tag Archives: ம.தி.மு.க. (MDMK)

தேசதுரோக வழக்கில் வைகோ குற்றவாளி… ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிப்பு

333

சென்னை: தேசதுரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றவாளி என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு ஒராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை ராணி சீதை மன்றத்தில் கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசினார்.அப்போது அவர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய …

Read More »

மூலக்கொத்தளம் மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தை அழிக்கும் தமிழக அரசு:

444

மூலக்கொத்தளம் மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தை அழித்து குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வைகோ  வெளியிட்ட அறிக்கையில், “சென்னை மூலக்கொத்தளம் பகுதியில், 20 ஏக்கர் பரப்பில் உள்ள மயானத்தில், உயிர் இழந்தோரின் உடல்கள், கடந்த 120 ஆண்டுகளாக எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும் வருகின்றது. மொழியின் தனித்தன்மையை, உரிமையைப் பாதுகாக்கவும், சமூக நீதியைக் காக்கவும், சமதர்ம …

Read More »

மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும்

444

மணப்பாறையில் வைகை, திருப்பதி, அந்த்யோதயா உட்பட அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வைகோ இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு அடுத்ததாக உள்ள பெரிய நகரம் மணப்பாறை. இந்நகரில் இருந்து கல்வி – வேலை வாய்ப்புகளுக்காக சென்னை மற்றும் மதுரை உள்பட பெரு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. …

Read More »

வைகோவின் உயரத்தை யாரும் எட்ட முடியாது

nanchil-sampath

ம.தி.மு.க-வில் வைகோவுடன் பயணித்து அ.தி.மு.க, தினகரன் அணி என சென்ற நாஞ்சில் சம்பத், தினகரன் அணியிலிருந்தும் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியேறிவிட்டார். கட்சி அரசியலை விட்டு விட்டதாகவும், தத்துவ அரசியலை மட்டும் விடவில்லை என்று தெரிவித்திருந்தார். தற்போது, அவர், வைகோ இருக்கும் திசையில் தலைகாட்ட துவங்கியிருக்கிறார். அதற்கெல்லாம் மேலாக ஸ்டெர்லைட் ஆலையை மூட முக்கிய காரணம் வைகோ மட்டுமே என்ற முழக்கத்தை சில நாள்களாக முன்வைத்தும் வருகிறார். இதனால் …

Read More »

செய்தித்தாள்களில் தலைப்பு செய்தியான வைகோ… மலேசியாவில் இருந்து திருப்பி அனுப்பினாலும்.

News

மலேசியாவுக்குள் நுழைய மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்ததோடு, அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தது. மலேசிய அரசு அவரை நேற்று இரவு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. வைகோ தடுத்து நிறுத்தப்பட்ட செய்தி மலேசியாவில் உள்ள தமிழ் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாகியுள்ளது. மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியின் மகள் திருமணத்தில் பங்கேற்பதற்காக வைகோ அந்நாட்டுக்கு சென்றிருந்தார். ஆனால் மலேசியாவுக்கு ஆபத்தானவர்கள் என்ற பட்டியலில் வைகோ …

Read More »

வீட்டு சிறையில் கருணாநிதி- வைகோவை பேச தூண்டியது யார்? பரபர தகவல்

444

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ பகிரங்கமாக பேசியது ஏன்? அவரைத் தூண்டியது யார் என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கருணாநிதி. பின்னர் வீடு திரும்பியது முதலே அவருக்கு அங்கும் சிறிய சிகிச்சைகள் தரப்பட்டு வருகின்றன. வீட்டு சிறை இதனால் நீண்ட நாட்களாக அவரிடம் இருந்து அறிக்கைகள் ஏதும் வரவில்லை. இந்த நிலையில் மதிமுக …

Read More »

அனைவரும் எதிர்க்கும்போது நான் மட்டும் மோடியை ஆதரிப்பது ஏன்?: வைகோ பேட்டி

222

சென்னை: பொருளாதார மாணவன் என்பதால் இந்தியாவுக்கு மோடியின் திட்டம் தேவை என்று வரவேற்றிருக்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் தான் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி இரவில் அறிவித்தபோது தமிழகத்திலேயே முதல் …

Read More »

நெருப்போடு விளையாடாதீர்கள்.. சித்தராமையாவுக்கு வைகோ எச்சரிக்கை

புதுக்கோட்டை: கர்நாடகத்தில் தமிழக இளைஞர் மீது விழுந்த ஒவ்வொரு அடியும், தேசிய ஒருமைப்பாட்டிற்கே குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது. நெருப்போடு விளையாட வேண்டாம் என்று கர்நாடக முதல்வரை நான் எச்சரிக்க விரும்புகிறேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். புதுக்கோட்டைக்கு வந்த வைகோ அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசு பக்கபலமாக உள்ளது. வெளிப்படையாக அனுமதி அளிக்காவிட்டாலும் அணை கட்டுப்படுவது உறுதியாகிவிடட்து. …

Read More »

புதிய கல்வி கொள்கையைக் கண்டித்து நாளை மறுநாள் (ஆக. 27) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார்.

சென்னை: மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையைக் கண்டித்து நாளை மறுநாள் (ஆக. 27) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை: டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்து இருக்கின்றது. கல்விக் கொள்கையில் முற்போக்கு என்ற முகமூடியுடன், பிற்போக்குத்தனமான அம்சங்கள் வரைவு …

Read More »

தப்பியது தேமுதிக, மதிமுக… தேர்தல் ஆணைய புதிய அறிவிப்பால் மாநில கட்சி அந்தஸ்து தொடரும்

டெல்லி: அரசியல் கட்சிகளுக்கு மாநில மற்றும் தேசிய கட்சி என்ற அங்கீகாரங்கள் அளிப்பது தொடர்பான பரிசீலனைக் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக தேர்தல் ஆணையம் அதிகரித்துள்ளது. இனி ஒரு தேர்தலில் குறிப்பிட்ட கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்து வாக்கு சதவீதத்தை இழந்தாலும் உடனடியாக அதன் அங்கீகாரம் ரத்தாகாது. தொடர்ந்து 2 தேர்தல்களில் படுதோல்வியடைந்தால் மட்டுமே அந்தக் கட்சியின் தேசிய மற்றும் மாநில கட்சி அங்கீகாரங்கள் பறிபோகும். …

Read More »